சென்னை:சென்னை- சேலம் இடையே 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு அறிவித்தது. 1,900 ஹெக்டர் நிலங்களை சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை கைவிடக்கோரி 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த திட்டத்துக்கு தடை விதித்து, திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் விவசாயிகள் ,தர்மபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் மற்றும் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணை 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது.
இந்த சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஐந்து மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்பட்டது.இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசுழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடரமாட்டோம் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி – எஸ்.பி பிரவின் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு 8-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழங்குகிறது.
இதையும் படியுங்கள்
- 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி
- சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கு: தூக்கு தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
- கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
- ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு ஆண்டுக்கு 40 நாள் சாதாரண விடுப்பு: இரண்டு தவணைகள், ஓராண்டு விதி எப்படிச் செயல்படும்? உயர் நீதிமன்றம் விளக்கம்
- தனியார் பள்ளி, கல்லூரி, வேலையளிப்போர் விண்ணப்பங்களில் சாதி விவரம் கட்டாயமா? சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
- கைதுக்கான காரணங்களை எழுத்தில் தராவிட்டால் என்ன ஆகும்? சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது, உங்கள் உரிமைகள்
- மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள்: ₹1,439 கோடி குடிநீர்த் திட்டம் உட்பட முழுப் பட்டியல்
← முந்தைய செய்தி: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவு
அடுத்த செய்தி →: 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி

