டெல்லி :கடந்த 2013-ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த ஐபிஎல் போட்டில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ,அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் போட்டியிட்டனர். அவர்கள் ஸ்பாட் பிக்ஸிங்முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது . இதனால் மூன்று வீரர்களுக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்து ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்தது.ஆனால், இதை எதிர்த்து பிசிசிஐ தரப்பில் முறையீடு செய்யப்பட்டது, இதனால் ஸ்ரீசாந்த் மீதான தடையை உறுதி செய்து கேரள உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை உச்சநீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ,பிசிசிஐ தாக்கல் செய்த மனுவை நாங்கள் பரிசீலித்தோம். இந்த வழக்கை பிசிசிஐ-யின் மத்தியஸ்தரிடம் ஒப்படைத்திருந்தோம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது வழங்கப்பட்ட தண்டனைக் காலத்தை குறைப்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மத்தியஸ்தர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படியுங்கள்
- சென்னை – சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு!
- 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி
- ஓய்வூதியம் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: ஓய்வூதியம் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
அடுத்த செய்தி →: சென்னை – சேலம் 8 வழிச்சாலை வழக்கு: 8-ம் தேதி தீர்ப்பு!

