“அக்னிபாத்” திட்டத்தின் மீதான மனுக்களை, விசாரிக்க கேவியட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது : மத்திய அரசு

அக்னிபாத்" திட்டத்தின் மீதான மனுக்களை, விசாரிக்க கேவியட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது : மத்திய அரசு File name: agnipath-scheme.webp


புது தில்லி : மத்திய அரசு பாதுகாப்புப் படைகளுக்கான “அக்னிபாத்” ஆள்சேர்ப்பு திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. கேவியட் விண்ணப்பத்தை தாக்கல் செய்த வழக்கறிஞர், தனது விண்ணப்பத்தில் அவர்களுக்கு (அவன், அவள் ) எதிராக எந்த எதிர்மறையும் இத்திட்டத்தில் இல்லை என குறிப்பிட்டிருந்தார்.
இதற்க்கு முன்னதாக அக்னிபாத் திட்டத்திற்கான மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல மனுத் தாக்கல் செய்தார். பொதுநல மனுவில் ஜூன் 14 – ம் தேதியன்று பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட பத்திரிக்கை அறிவிப்பு குறிப்பை சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மற்றும் “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருந்தார்.
வழக்கறிஞர் ஹர்ஷ் அஜய் சிங்கும், ஆயுதப்படைகளுக்கான அக்னிபாத் ஆள்சேர்ப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இத்திட்டம் “இந்திய ராணுவத்தில்” நான்கு ஆண்டுகள் என்ற குறுகிய கால அவகாசம் கொண்டு இருப்பதாகவும் மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட ”அக்னிவீர்ஸ்” எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையுடன் இருப்பதன் காரண மாகவும் பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, ஹரியானா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தின் அறிவிப்புக்கு நாடு தழுவிய எதிர்ப்பும், போராட்டமும் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வழக்கறிஞர் விஷால் திவாரி, அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வெடித்த வன்முறைப் போராட்டம் குறித்து விசாரணை நடத்தவும், ரயில்வே உள்ளிட்ட பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விசாரிக்கவும் எஸ்ஐடி அமைக்க உத்தரவிடக் கோரியும் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். மேலும் ஜூன் 24, 2022 முதல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்குமாறும் வழக்கறிஞர் கோரினார்.
மத்திய அரசு தனது பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் தொடங்கப்பட்ட “அக்னிபாத் திட்டமானது ” நாட்டிற்கு பேரழிவை விளைவிக்கலாம், ஆகவே தங்களது (உச்ச நீதிமன்றம் ) கவனத்திற்கு கொண்டுவர விருப்புவதாகவும், தேசிய பாதுகாப்பு மற்றும் இந்திய ராணுவத்தில் ”அக்னிபாத் திட்டம்” அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கறிஞர் திவாரி தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts