சீனாவில் தற்போது தாய்ப்பால் விற்பனை சூடுபிடித்துள்ளது, இதற்கு கடும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
சீனாவில் ஊட்டச் சத்து நிறைந்தது, உடலுக்கு அதிக எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்பதால் தாய்ப்பாலை புட்டியில் அடைத்து விற்க பல ஏஜென்சிகள் திடீரென முளைத்துள்ளன.
இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்க பணக்காரர்கள் தயாராக உள்ளனர்.
தங்களது குழந்தைகளுக்கு மட்டுமின்றி இளவயதினரும் தாய்ப்பாலை விலைக்கு வாங்கி குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக சிறிய அளவிலான இயந்திரங்களும் மறைமுகமாக விற்பனைக்கு வந்துள்ளன. தாய்மார்களிடம் இருந்து சிறிய பம்ப் மூலம் தாய்ப்பாலை உறிஞ்சி கணிசமான விலைக்கு விற்கின்றனர்.
இதற்காக தாய்மார்களுக்கு கூலியும் கொடுக்கப்படுகிறது. ஒருவருக்கு அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கூலியாக கொடுக்கப்படுகிறது.
இதற்காக ஏராளமான புரோக்கர்கள், கிராமங்களில் உள்ள குழந்தை பெற்ற ஏழை தாய்மார்களை அடிமாட்டு விலைக்கு தயார் செய்கின்றனர்.
இதில் கணிசமான பங்கை அவர்கள் எடுத்து கொண்டு மீதமுள்ள சொற்ப பணத்தை ஏழை தாய்மார்களுக்கு வழங்குகின்றனர்.
பெண்களை வர்த்தக பண்டமாக நடத்தும் நிலைக்கு சீனா சென்றுள்ளது வருத்தத்தை அளிக்கிறது என்று பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
- போலி என்கவுன்ட்டர்: 13 போலீஸார் உள்பட 21 பேருக்கு ஆயுள் தண்டனை
- அமெரிக்காவுடன் இணைந்து தொழில்வாய்ப்பு – ப.சிதம்பரம்
- இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- சட்ட மாணவர்கள் வருகைப் பதிவு: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மனுக்களில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: இளவரசன் மரணம் தற்கொலை – வாய்ப்பு இல்லை: மனித உரிமை கழகம்
அடுத்த செய்தி →: வானத்தில் இரண்டு நிலாக்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
