Woof To Wash: The Wonderful Dog-Operated Washing Machine
நாய்கள் பயன் படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட வாஷிங் மெஷின் :
பிறர் உதவி தேவைபடுபவர்கள் உதவும் விதமாக அவர்கள் நாய் குரைக்கும் போது செயல்படும் ஒரு வாஷிங் மிஷின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டானியாவைச் சேர்ந்த ஜே.ரி.எம். சேர்விஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாஷிங் மெஷின் நாய்கள் தமது வாயால் அதன் கதவைத் திறக்கும் வகையில் விசேஷ கைப் பிடியையும் கொண்டுள்ளது.அத்துடன் ‘ஊப் டு வாஷ்’ என்ற இந்த வாஷிங் மெஷின் நாய்களின் குரைப்புக்கு தகுந்தாற்போல் செயல்படும்திறன் உள்ள கருவியொன்றும் பொருத்தப்பட்டுள்ளது.
இயல்பாக செயல்பட முடியாத விசேஷ தேவையுள்ளவர்களுக்காக பயிற்சியளிக்கப்பட்ட நாய் இந்த சலவை இயந்திரத்தின் கதவைத் திறந்து சலவை செய்ய வேண்டிய துணிகளை உள்ளே தள்ளி, அதன் கதவை மூடி குரைத்ததும் இயந்திரம் செயல்பட ஆரம்பிக்கிறது.அத்துடன் இந்த மெஷின் தன்னிச்சையாக தேவையான அளவு நீரை பயன்படுத்தி சலவையை மேற்கொள்கின்றது என்பது சிறப்பு தகவல்..
Woof To Wash: The Wonderful Dog-Operated Washing Machine
Woof to Wash enables specially-trained dogs to work an adapted washing machine with a footpad. The machine starts with a ‘woof’. Detergent is dispensed automatically. The door is opened by pulling a rope.