வானத்தில் இரண்டு நிலாக்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்னாள் வானத்தில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், பின்னர் ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு அவை ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்தில் சில கிரகங்களுக்கு இரண்டு அல்லது மூன்று துணைக்கோள்கள் இருக்கும். ஆனால் நாம் வாழும் கிரகமான பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் மட்டுமே உண்டு. இந்நிலையில் முன்னைய காலங்களில் இரண்டு நிலாக்கள் இருந்ததாகவும், அவை ஒன்றுடன் ஒன்று ஈர்க்கப்பட்டு ஒரே நிலாவாக மாறியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வு சில மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கலிபோர்னியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இரு கோள்களும் மிதமான வேகத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து, 2வது நிலாவை அதனுடன் சுற்றி வந்த முதல் நிலா ஈர்த்துக் கொண்டு விட்டது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு நிலா மோதிக் கொண்டதின் விளைவாகவே, தற்போது உள்ள நிலவின் மேற்பரப்பில் மலை போன்ற உயர் நிலங்கள் உருவாகி உள்ளதாகவும், ஈர்ப்பு சக்தி அலைகளால் நிலாவின் கூட்டுப் பகுதி ஏற்றத் தாழ்வுகளுடன் காணப்படுவதாகவும் அவர்களது ஆய்வில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts