காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான் நிம்மதியான இல்லற வாழ்க்கை வாழ முடியும் என முன்னாள் காவல் துறை அதிகாரி திலகவதி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஐ.ஜி.சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் மூன்று காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு பெண் சட்ட வல்லுநர் உள்ளிட்ட 5 பேர் உறுப்பினர்களாக அமைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு குறித்து பி.பி.சியில் கருத்தை பதிவு செய்த முன்னாள் காவல் துறை உயர் அதிகாரியான திலகவதி காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் தங்களது மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தான் அவர்கள் தங்களது இல்லற வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க முடியும்.
மேலும் காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் காவலர்களை தங்களது மகளாக அல்லது சகோதரியாகவோ ஏன் குறைந்த பட்சம் சக ஊழியராக கூட மதிப்பதில்லை. அதனால் தான் பெண் காவலர்களிடம் அவர்கள் வேறு மாதிரியான பிரதிபலனை எதிர்பார்க்கின்றார்கள். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டு பெண் காவலர்கள் தற்கொலை செய்யப்படும் சம்பவங்கள் தற்போது தமிழக காவல் துறையில் நடந்து கொண்டிருக்கின்றன.
இது போன்ற பிரச்னைகளை விசாரிக்கும் இடத்தில் முன்பு நான் இருந்தபோது பெண் காலவலர்கள் பல பேர் மேலதிகாரிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முறையிட்டார்கள். ஆனால் எழுத்துப்பூர்வமாக புகார் தரமுடியுமா? என்று கேட்டபோது அவர்கள் அனைவருமே பின் வாங்கி விட்டனர்.
இதுவே பல அதிகாரிகளுக்கு சாதகமாகி விடுகின்றது. இது போன்ற சூழ்நிலைகளில் விசாரணை அதிகாரியாக இருப்பவர்கள் புகாருக்காக காத்துக் கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட அதிகாரியை வேறு இடத்திற்கு மாற்றி அவர்களது பணிச்சுமையை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதன் மூலம் பெண் காவலர்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் ஓரளவாவது குறையும் என்று கூறியுள்ளார்.
திலகவதியின் இந்த கருத்துப் பதிவு காவல் துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
thilagavathy ips speech about higher officers
thilagavathy ips speech about higher officers
இதையும் படியுங்கள்
- தெருவில் சுற்றி வரும் திருடர்கள் பிடிக்க காவல் துறையினர் அதிரடி
- உளறல் மன்னனாக வலம் வரும் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்
- தமிழகம் முழுவதும் 20 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்!
- குடும்ப ஏற்பாட்டுப் பத்திரங்களுக்குக் காகிதமில்லா பத்திரப் பதிவு: 4 வகைப் பத்திரங்கள், தேதி குறித்த தகவல் முரண்
- செவிலியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்: நவம்பர் 3 பேச்சுவார்த்தை, கோரிக்கை நிறைவேறாவிட்டால் மாநிலந்தழுவிய போராட்டம் என எச்சரிக்கை
- இலவச வீட்டுமனைப் பட்டா ஆக்கிரமிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
- தமிழக மீனவர்கள், கச்சத்தீவு வழக்கு: இலங்கை கடல் எல்லையைத் தாண்டாதவாறு விழிப்புணர்வு தேவை என உச்ச நீதிமன்றம் கருத்து
← முந்தைய செய்தி: வானத்தில் இரண்டு நிலாக்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
அடுத்த செய்தி →: கென்யாவில் 1000க்கும் அதிகமான பள்ளிச் சிறுவர்கள் கைது: மதுப்பழக்கம்
