லோக்பால் விவகாரத்தில் துரோகம். மீண்டும் போராட்டம்:அன்னாஹசாரே

Anna Hazare accuses UPA of betrayal on Lokpal, threatens fresh stir

புதுடெல்லி, ஜூலை 6–

லஞ்சம், ஊழலை ஒழிக்க வகை செய்யும் வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வரக்கோரி பிரபல காந்திய வாதி அன்னாஹசாரே கடந்த 2011–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உண்ணாவிரத போராட்டம் காரணமாக ஊழலுக்கு எதிராக நாடெங்கும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அன்னாஹசாரேக்கு ஆதரவு பெருகியது. ஊழலுக்கு எதிராக மக்கள் அலை, அலையாக திரள்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் அரசு வேறு வழியில்லாமல் பணிந்தது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.

பாராளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் லோக்பால் உறுப்பினர்கள் மற்றும் செயல்படுத்தும் விஷயத்தில் அன்னா ஹசாரேக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அன்னா ஹசாரே குழுவினரின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து ஏற்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். அதை அவர் எழுத்துப்பூர்வமாகவும் எழுதி கொடுத்தார். ஆனால் அதன் பிறகு மத்திய அரசு அன்னாஹசாரே குழுவை கண்டு கொள்ள வில்லை. இந்த நிலையில் இன்று அலகாபாத் வந்த அன்னாஹசாரே நிருபர்களிடம் பேசுகையில், ‘லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை’ என்றார்.

அன்னாஹசாரே மேலும் கூறியதாவது:–

லோக்பால் மசோதாவை ஆக்கப்பூர்வமானதாக்க மத்திய அரசு தவறிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. இதை நாங்கள் விட்டு விட போவதில்லை. லோக்பால் மசோதாவை பயனுள்ளதாக மாற்ற கோரி மீண்டும் டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதற்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. அக்டோபர் அல்லது நவம்பரில் மத்திய அரசுக்கு எதிரான என் போராட்டம் தொடங்கும்.

English Summary:

Anna Hazare accuses UPA of betrayal on Lokpal, threatens fresh stir

Hazare’s 12-day-long fast at the Ramlila Ground in August, 2011 had received international attention. Anna Hazare Accusing the Centre of “betrayal” on the Lokpal Bill, anti-corruption activist Anna Hazare today threatened to launch a fresh stir at Ramlila ground in Delhi later this year to raise the pitch over the issue. “After the Parliament had passed a resolution in favour of a strong Lokpal Bill, the Prime Minister had given us a written assurance that our concerns would be addressed and a strong and effective ombudsman will be in place. Two years have elapsed since then”, Hazare told reporters here. “This is an act of betrayal on part of the government which is refusing to fulfil its promise to the nation”, the noted Gandhian, who made a brief halt in the city while on his way to Rewa in the neighbouring state of Madhya Pradesh, said. “We will not take it lying down. I have decided to launch a fresh stir at the Ramlila ground in Delhi. The date has not been finalised yet, but it would most probably be in October-November. “We will compel the insensitive political establishment to pay heed to the voice of the nation”, Hazare added. Hazare’s 12-day-long fast at the Ramlila Ground in August, 2011 had received international attention and eventually led to a resolution being passed during a special session of the Parliament wherein it had agreed in principle on some of the suggestions made by the anti-graft activist and his associates.

 

Related posts