சென்னை:.கடந்த ஜனவரி மாதம் சென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் விலங்கியல் பிரிவு மாணவ மாணவிகள் கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றனர்.சுற்றுலா சென்று திரும்பிய மாணவிகள் சாமுவேல் டென்னிசன் மற்றும் ரவின் பேராசிரியர்கள் பாலியல் தொல்லை அளித்ததாக முதல்வருக்கு மாணவிகள் புகார் அளித்தனர்.இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், பணிநீக்கம் செய்வது தொடர்பாக சாமுவேலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். மனுவை தள்ளுபடி செய்ததோடு, கிறிஸ்தவ மிஷனரீஸ் கட்டாய மத மாற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார். கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பு இல்லை என்று பெற்றோர் மத்தியில் நிலவுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
- டெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்
- போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தி முன்னாள் கணவர் மீது பொய் புகார் -சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
- மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
- அண்ணன் சீர் திட்டம்: மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கக் காசு, பட்டுப் புடவை பெற ஆதார் கட்டாயம்; ரூ.812 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் இணைய உரிமை: இணையத்தைப் பயன்படுத்துவது குழந்தைகள் உட்பட அனைவரின் அடிப்படை உரிமை; முழுத் தடை சரியல்ல என உச்ச நீதிமன்றம்
- கொடைக்கானல் ஆன்லைன் டிக்கெட்: பில்லர் ராக்ஸ், குணா குகை உள்ளிட்ட வனத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு முன்பதிவு கட்டாயம் அறிமுகம்
← முந்தைய செய்தி: மது அருந்திவிட்டு கல்லூரிக்கு வந்த எட்டு கல்லூரி மாணவர்களுக்கு புதுவித தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது
அடுத்த செய்தி →: டெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்

