டெல்லி வீட்டில் ப. சிதம்பரத்தை கைது செய்ய சென்ற சிபிஐ அதிகாரிகள் ஏமாற்றம்

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.பிறகு உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்சநீதிமனறம் மறுத்துவிட்டது.இதனால் எப்போது வேண்டுமானாலும் ப.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்புள்ளது.டெல்லியில் உள்ள ப. சிதம்பரம் வீட்டிற்கு கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் சென்றனர்.அவர் வீட்டில் ப.சிதம்பரம் இல்லாததால் சிபிஐ அதிகாரிகள் திரும்பி சென்றனர்.ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு நாளை விசாரிக்க வாய்ப்புள்ளது.

Related posts