மதுரை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியை சேர்ந்த எட்டு மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக புகார் எழுந்தது. தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி எட்டு மாணவர்களையும் 3ம் ஆண்டு வகுப்புக்கு அனுமதிக்கவில்லை.
தங்களை 3ம் ஆண்டு வகுப்பில் அனுமதிக்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட கோரி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியை மாணவர்கள் மேற்கொள்ள உத்தரவிட்டார். மாணவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதி ஆணை பிறப்பித்தார்.