இன்று வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலவு

பௌர்ணமி தினமான இன்று(ஞாயிறு,23/06/2013) வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலா தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நிலா நீள்வட்ட கோளத்தில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும். அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது. நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான…

Read More

60 நாட்கள் தூங்காமல் இருந்த மைக்கல் ஜாக்சன்

மறைந்த உலகப்பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது தெரியவந்துள்ளது. மைக்கேல் ஜாக்சனின் மரணம் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஹார்டுவர்ட் மெடிகல் ஸ்கூல் ஸ்லீப் எக்ஸ்பெர்ட் (Harvard Medical School sleep expert, Charles Czeisler) என்பவர் தனது அறிக்கையில், மைகேல் ஜாக்சன் தனது இறுதி நாட்களில் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தொடர்ந்து 60 நாட்கள் தூங்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவே அவரது மரணத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தெரிந்து உலகிலேயே ஒரு மனிதன் 60 நாட்கள் தொடர்ச்சியாக தூங்காமல் இருந்தது மைக்கேல் ஜாக்சனாக தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த Dr. Murray அறியவில்லை என்றும், இதற்காக எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் மைக்கேல் ஜாக்சனின் தாயார் தெரிவித்துள்ளார். Michael…

Read More

கர்ப்பிணி பெண்களின் அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்கிறது

நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான உணவு மற்றும் சிகிச்சை போன்றவற்றிற்கான செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரக்கூடிய திட்டத்தை நடைமுறைப் படுத்தவுள்ளோம். இத்திட்டத்தின்படி பிரசவத்துக்கு முன் 7 முதல் 9 மாதங்கள் வரை அவர்களின் சிகிச்சை, நோய் அறிகுறிகளை அறிதல், மற்றும் போக்குவரத்து உணவு ஆகியவற்றுக்கான செலவுகளையும் மேலும் குழந்தை பிறந்த ஒராண்டு வரை நோய் ஏற்பட்டால் அந்த சிகிச்சைக்கான செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். இந்திரா காந்தி மாத்ருத்வ சஹயோக் யோஜனா திட்டத்தின்படி, ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவத்தின்போது மட்டுமே பயன்கள் கிடைக்கும். ஆனால், இப்போது அத்திட்டத்தை மேலும் தரம் உயர்த்த உள்ளோம்.…

Read More

தமிழக அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் துவங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக  பாடசாலை கல்வி துறை வெளியிடப்பட்டுள்ள, 2013-14ம் கல்வி ஆண்டிற்கான, நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது, அரசு பள்ளிகள் காலை, 9:30 மணிக்கு துவங்குகின்றன. இந்த நேரத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி மாணவர், குறித்த நேரத்தில், பாடசாலைக்கு செல்ல முடிவதில்லை. இதையடுத்து நாளைமுதல் (திங்கட்கிழமை) முதல், பள்ளிகள், காலை, 9:00 மணிக்கு துவங்கும் என நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணைபடி, காலை, 9:00 மணிக்கு பாடசாலை துவங்கும், மாலை, 4:15க்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     Government school timing changed. Tamilnadu government

Read More

கேதர்நாத்தில் 200க்கு மேற்பட்ட கிராமங்கள் அழிந்தன 5000 பேர் சாவு

200 villages destroyed in uttarakhand flood ஜூன். 23 -2013 : புது டெல்லி:  உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழைக்கு ருத்ரபிரயாகை, சமோலி ஆகிய 2 மாவட்டங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக கேதர்நாத், ருத்ரபிரயாகை வழித்தடம் சின்னாபின்னமாகி விட்டது. அந்த சாலையை செப்பனிடவே 2 ஆண்டுகள் ஆகும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். கேதர்நாத், பத்ரிநாத் புனித தலங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளம் போல் பல இடங்களில் தண்ணீர் கிளம்பியதில் சுமார் 200 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. அந்த கிராமங்களில் வசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. கேதர்நாத், ருத்ரபிரயாகை சாலையில் சுமார் 50 ஆயிரம் பேர் இன்னமும் தவித்தபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பேரழிவு ஏற்பட்டதும் மீட்பு குழுக்களை அனுப்பி…

Read More

தமிழ்நாட்டில் 15 புதிய பாலங்கள் – அரசு அலுவலக கட்டிடங்கள் திறப்பு

15 new bridges and government building opened in tamilnadu தமிழகத்தில் ரூ.58 கோடியில் கட்டப்பட்ட 15 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் புதிய பாலங்களை அவர் திறந்தார். இதற்கான நிகழ்ச்சி கடந்த 20- ஆம் தேதி நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் சாலையில், கிளியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், விழுப்புரம் மாவட்டம், அகரக்கோட்டாலத்தில் மணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், அரியலூர் மாவட்டம், குழுமூரில் ஆணைவாரி ஓடை குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் ரயில்வே கடவு எண் 130-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் மங்கலத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் ஆகியவற்றை முதல்வர்…

Read More

சுவிஸ் வங்கியில் இந்தியர்களை விட பாகிஸ்தானிய கருப்புப்பணம் அதிகம் .

pakistani black money in swiss banks சூரிச் : மக்கள் தொகையிலும்,  பரப்பளவிலும், தொழில்நுட்பத்திலும் மிக வேகமாக வளர்ந்துள்ள இந்தியாவை விட, பாகிஸ்தான் நாட்டவர்கள் சுவிஸ் வங்கியில் அதிகமான தொகையை கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்த வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணத்தை விட, பாகிஸ்தானியர்கள் மற்றும் அந்நாட்டு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள கணக்கில்தான் அதிகமான கறுப்புப்பணம் பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சுவிஸ் வங்கியில் பாகிஸ்தானியர்கள் வைத்துள்ள பணத்தின் அளவு ரூ.92000 கோடியாகும். சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தின் அளவு ரூ.9000 கோடியாக குறைந்துள்ளது. இது 2012ம் ஆண்டை விட 35 சதவீதம் அல்லது ரூ.4900 கோடி குறைவாகும். 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் ரூ.14,000 கோடி இந்தியர்களின் சேகரிப்பில் இருந்த பணம் மூடப்பட்டுள்ளது.…

Read More

மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை: பா.ம.க

பாமக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், வரும் மாநிலங்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,. பாமக முன்னரே அறிவித்தபடி  எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டு இல்லை, ஆதரவும் இல்லை என்பதற்கேற்ப, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார் அன்புமணி ராமதாஸ். தமிழ்நாட்டில் கடந்த 2011&ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, எதிர்காலச் செயல் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக 27.07.2011 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இனி வரும் காலங்களில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசியக் கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பதில்லை என்றும், ஒத்த கருத்துள்ள கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளுடன் இணைந்து தனி அணியை ஏற்படுத்தி போட்டியிடுவது என்றும் முடிவெடுக்கப் பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த முடிவு அனைத்து தரப்பு மக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின்…

Read More

வருகிறது மலிவு விலை அம்மா மினரல் வாட்டர் கேன்

low cost mineral water bottle tamilnadu குறைந்த விலையில் சுகாதாரமான குடிநீரை வழங்கும் நோக்கத்தில் தமிழக அரசு அம்மா மினரல் வாட்டர்  என்று  உற்பத்தி நிலையம் அமைக்க படும் என்று  முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதா  அறிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இந்த குடிநீர் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாளொன்றுக்கு 3 லட்சம் லிட்டர் குடிநீர் தயாரிக்கும் வகையில் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அவர் அறிக்கையில் அறிவித்துள்ளார். இங்கு உற்பத்தியாகும் குடிநீர் ஒரு லிட்டர் அளவுக் கொண்ட பிளாஸ்டிக் பாட்டீல்களில் நிரப்பட்டு நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந் தேதி அன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார்.…

Read More

சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013 : மொகாடிசு : சோமாலியா தலைநகர் மொகாடிசுல் உள்ள முக்கிய ஐ.நா மையம் மீது   பயங்கரவாத தாக்குதலில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர். மொகாடிசுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்ட மையத்தின் நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பை பயன்படுத்தி ஆயுதமேந்திய தீவிரவாதிகள்  ஐ.நா மையத்தின் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி படைக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பேர் பலியாகினர். பலியானோரில் 4 ஐ.நா பாதுகாப்பு படையினர் மற்றும் 4 உள்ளூர் பாதுகாப்பு படையினர் அடங்குவர். இந்த தாக்குதலை ஐ.நா பொது செயலர் பான் கீ மூன் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுபேற்று அல் சபாப்  என்ற தீவிரவாத அமைப்பு,  அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட சாத்தானிய சக்தியான ஐ.நாவை விரட்டும் வரை இது போன்ற தாக்குதல் தொடரும் என…

Read More