பௌர்ணமி தினமான இன்று(ஞாயிறு,23/06/2013) வழக்கத்தை விட கூடுதலாக மிகப்பெரிய நிலா தோன்றும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியை நிலா நீள்வட்ட கோளத்தில் சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றும் போது சில காலங்களில் பூமியில் இருந்து தொலைவிலும், சில காலங்களில் பூமிக்கு அருகிலும் நிலா வந்து செல்லும். அருகில் வரும் போது அதனால் பூமியில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மாற்றம் காரணமாக கடல், காற்று போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். இயற்கை சீற்றங்களுக்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணமாகின்றன. இதனால் பௌர்ணமி காலங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று இரவு வானில் அதிசயம் நிகழ உள்ளது. நீள்வட்ட கோளப்பாதையில் சுற்றும் நிலா பூமிக்கு மிக அருகில் வருகிறது. அதாவது 2,21,824 மைல் தொலைவில் நிலா வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கத்தை விட நிலா சற்று பெரிய அளவில் தெரியும். அது வழக்கமான அளவை விட 30 சதவிகிதம் கூடுதலாக தெரியும் என்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் ஓராண்டுக்கு ஒரு முறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு தோன்றும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பூமியின் ஒரு சில பகுதிகளில் இந்த மிகப் பெரிய நிலா காலை 7 மணிக்கே தெரிந்ததையும் நிபுணர்கள் பதிவு செய்துள்ளனர்.
today we can see big moon
இதையும் படியுங்கள்
- வானத்தில் இரண்டு நிலாக்கள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
- மின்னல் மூலம் செல்போனுக்கு சார்ஜ்: பிரிட்டன் விஞ்ஞானிகள் சாதனை
- மனித முன்னோடிகள் எலியை விட சிறியவர்கள் : சீன ஆராய்ச்சி
- மேலும் தளர்வுகள் அறிவிப்பு… தமிழ் நாடு முழுவதும் சென்னை உட்பட…
- நீல திமிங்கலம் தமிழ்நாடு கடற்கரையில் கரை ஒதுங்கியது
- இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) சென்னை வட்டம் இரண்டாகப் பிரிந்து விரிவாக்கம் நிறைவேற்றப்பட்டது
- மருந்தாளுநர் பணியிடங்களுக்கானத் தேர்வில் பி.பார்ம் பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
← முந்தைய செய்தி: 60 நாட்கள் தூங்காமல் இருந்த மைக்கல் ஜாக்சன்
அடுத்த செய்தி →: கிரிகெட் மினி உலகக்கோப்பையை வென்று இந்தியா சாதனை
