மருத்துவ மாணவர்களிடம் இருந்து வசூலித்த கூடுதல் கட்டணத்தை திருப்பி தர உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:புதுச்சேரியில் உள்ள பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரி ஆகிய கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டண நிர்ணயக்குழு நிர்ணயத்ததை விட கூடுதலாக வசூலித்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் சி.சரவணன் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மாணவர்களிடம் இருந்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related posts