வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் நிலநடுக்கம்

புதுதில்லி: 16 ஏப்ரல் 2013

இந்தியாவில் நிலநடுக்கம் – இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மாலை 4.18மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்தியாவில் நிலநடுக்கம்

இன்று இந்தியா நேரப்படி மாலை 4.18 மணி அளவில் இந்த லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ராஜஸ்தான், தில்லி, மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் தில்லியைச் சுற்றிலுமுள்ள சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது சுமார் 20 விநாடிகள் நீடித்து என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்தது. இந்த நிலநடுக்கத்தின் இழப்புகள் மற்றும் பாதிப்புகள்  பற்றி உடனடித் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Related posts