தமிழ்நாட்டில் 15 புதிய பாலங்கள் – அரசு அலுவலக கட்டிடங்கள் திறப்பு

15 new bridges and government building opened in tamilnadu

தமிழகத்தில் ரூ.58 கோடியில் கட்டப்பட்ட 15 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் புதிய பாலங்களை அவர் திறந்தார். இதற்கான நிகழ்ச்சி கடந்த 20- ஆம் தேதி நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்தார்

இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் சாலையில், கிளியாற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம், விழுப்புரம் மாவட்டம், அகரக்கோட்டாலத்தில் மணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், அரியலூர் மாவட்டம், குழுமூரில் ஆணைவாரி ஓடை குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் ரயில்வே கடவு எண் 130-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் மங்கலத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம், நீலாம்பூரில் ரயில்வே கடவு எண் 143-க்கு மாற்றாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம், கரவல்லி மாதப்பூர் – செங்கதுரை குமாரபாளையம் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், மதுரை மாவட்டம் கண்டுகுளத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், திண்டுக்கல் மாவட்டம் வெரியப்பூர் அருகில் கட்டப்பட்டுள்ள பாலம், விருதுநகர் மாவட்டம், கிருதமாலில் கட்டப்பட்டுள்ள பாலம், திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம் மற்றும் வேட்டைக்காரன்குளத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சின்னூரில் காட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்டப் பாலம், கன்னியாகுமரி மாவட்டம், வழுக்கம்பாறையில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் ரூ.58.23 கோடியில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

சென்னை-காஞ்சிபுரம்: சென்னை, கீரின்வேஸ் சாலையில் ரூ.14.90 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் தலைமை அலுவலகக் கட்டடம், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் கட்டப்பட்டுள்ள உட்கோட்ட அலுவலகக் கட்டடம், சேலம் மேற்கு மற்றும் ஏற்காட்டில் பயணியர் மாளிகைள், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் கட்டப்பட்டுள்ள உட்கோட்ட அலுவலகக் கட்டடம், கோவை மாவட்டம் வால்பாறை, ஆனைமலை, கோயம்புத்தூர் தெற்கு கோட்ட அலுவலக வளாகம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம் ஆகிய இடங்களில் புதிய பயணியர் மாளிகைகளை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

சூலூரில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடம், தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு ஆராய்ச்சி உட்கோட்டம், பிரிவு அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடம் மற்றும் புதிய பயணியர் மாளிகை, போடிநாயக்கனூர், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஆகிய இடங்களில் புதிய பயணியர் மாளிகை, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கட்டப்பட்டுள்ள உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டடங்கள் என மொத்தம் ரூ.19.20 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

Courtesy: Dinamani

15 new bridges and government building opened in tamilnadu

Related posts