சோமாலி தீவிரவாதிகள் ஐ.நா மையம் மீது தாக்குதல், 22 நபர்கள் பலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013 : மொகாடிசு : சோமாலியா தலைநகர் மொகாடிசுல் உள்ள முக்கிய ஐ.நா மையம் மீது   பயங்கரவாத தாக்குதலில் 22 நபர்கள் பலியாகியுள்ளனர். மொகாடிசுவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் முன்னேற்ற திட்ட மையத்தின் நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ஏற்பட்ட பரபரப்பை பயன்படுத்தி ஆயுதமேந்திய தீவிரவாதிகள்  ஐ.நா மையத்தின் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அமைதி படைக்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பேர் பலியாகினர். பலியானோரில் 4 ஐ.நா பாதுகாப்பு படையினர் மற்றும் 4 உள்ளூர் பாதுகாப்பு படையினர் அடங்குவர். இந்த தாக்குதலை ஐ.நா பொது செயலர் பான் கீ மூன் வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பொறுபேற்று அல் சபாப்  என்ற தீவிரவாத அமைப்பு,  அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அமைக்கப்பட்ட சாத்தானிய சக்தியான ஐ.நாவை விரட்டும் வரை இது போன்ற தாக்குதல் தொடரும் என…

Read More