Road accident in india. tamilnadu in Top Position. இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறும் பகுதியாக தமிழ்நாடு பதிவாகியுள்ளது. கடந்த வருடம் தமிழ் நாட்டில் 67 ஆயிரத்து 757 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 16 ஆயிரத்து 175 பேர் உயிரிழந்துள்ளனர். முக்கியமான பிரதான சாலைகளில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. அளவுக்கு அதிகமான வேகம், மதுபோதையில் வாகனம் செலுத்துதல், வாகன ஓட்டிகளுக்கு முறையான பயிற்சியின்மை, உள்ளிட்டவை விபத்துக்களுக்கான பிரதான காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. இதேவேளை பாதுகாப்பான முறையில் சாலை கட்டமைப்புக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளே இல்லை என்ற நிலை மாறி இன்று 100அடி 200அடி சாலைகள் வந்த பிறகு அதை பொதுமக்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் உபயோகம் செய்யாமல் அதி வேக பயணம் செய்வதாலும் சாலை விதிகளை சரிவர பின்பற்றததுமே காரணம் என தெரிவிக்கின்றனர் Road accident in india. tamilnadu in Top Position.
Read MoreYou are here
- Home
- Tamilnadu no1 in Road accidents