தங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சி!

gold price dips in tamilnadu வியாழக்கிழமை, 27 ஜூன் 2013: இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.2,481-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.19,848-க்கும் விற்பனையாகிறது. மேலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.49 குறைந்து ரூ.2,653க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.42.90க்கும், கிலோவுக்கு ரூ.1,195 குறைந்து ரூ.40,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலைகள் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டு அரசு நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்களுடைய பங்குகளை திரும்ப பெற்று தங்கத்தில் அதை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இதனால் தங்கத்தின் விலை கடந்த ஆண்டில் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, பல்வேறு ஐரோப்பிய…

Read More