Indian woman in UK forced to carry dead fetus in womb for two days சென்னையை பூர்விகமாக கொண்ட கார்த்திகேயன் குமரேசன் எனும் பொறியியல் வல்லுநர் வேலை நிமித்தமாக 6 ஆண்டுகளுக்கு முன் தனது மனைவி நிரஞ்சனாவை அழைத்து கொண்டு இங்கிலாந்தில் குடியேறினார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். 33 வயதான திருமதி.நிரஞ்சனா 2வது முறையாக கரு தரித்தபோது, அவருக்கு செப்டம்பர் 18 ஆம் தேதி பிரசவ நாள் என குறிக்கப்பட்டது. குறிக்கப்பட்ட அந்த தேதியைத் தாண்டி 3 நாட்கள் சென்ற பிறகும் அவருக்கு பிரசவ வலி வராமல் அதற்கு உண்டான அறிகுறி எதும் தோன்றாமல் இருந்தது. மேலும், வயிற்றில் உள்ள குழந்தையினது அசைவும் தென்படவில்லை. அதலால் சந்தேகம் கொண்ட அந்தத் தம்பதி உடனே வடக்கு லண்டனில் இருக்கும் பார்னெட்…
Read More லண்டனில் இறந்த குழந்தையை வயிற்றில் 2 நாட்கள் சுமந்த சென்னை பெண்மத்திய பிரதேசம் நவராத்திரி வழிபாட்டு விழா நெரிசலில் சிக்கி 115 பேர் பலி
madhya pradesh temple stampede : 115 killed over 100 injured மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரதன்கர் கோவிலில் உண்டான கூட்ட நெரிசலில் 115 பக்தர்கள் பலி மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரதன்கர் கோவிலில் உண்டான கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கி 115 பக்தர்கள் பலியானார்கள் அது மட்டும் இன்றி சுமார் 100 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ரதன்கர் மாதா கோவில் மத்திய பிரதேசத்தில் உள்ள தாதியா எனும் மாவட்டத்தில் இருக்கிறது. நவராத்திரி கடைசி நாளான நேற்று அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள பல்லாயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தார்கள். பாலம் இடிந்து விழுவதாக பரவிய வதந்தி வழிபாட்டை காண கோவிலுக்கு செல்ல கோவிலை அடைய அவர்கள் சிந்து நதியை கடக்க அதன் மீதுள்ள பாலத்தில் செல்ல வேண்டும். அந்த…
Read More மத்திய பிரதேசம் நவராத்திரி வழிபாட்டு விழா நெரிசலில் சிக்கி 115 பேர் பலிநைரோபியில் மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டி
A UNIQUE BEAUTY PAGEANT CALLED ‘MISS FABULOUS’ கென்யாவின் தலைநகர் நைரோபியில் வித்தியாசமான அழகிப் போட்டி ஒன்று நடந்துள்ளது. இவ்அழகிப் போட்டியில் பங்கேற்ற பெண்களின் உடல் அழகை கணக்கில் வைத்தோ ஏனைய வனப்பை வைத்தோ பட்டம் கொடுக்க படவில்லை. இதற்கு மாறாக பெண் மாற்றுத் திறனாளிகள் தான் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கினார்கள். உலகில் எல்லா இடங்களிலும் தற்பொழுது தடுக்கி விழுந்தால் பெரும்பாலான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவங்கள் அழகிப் போட்டியை தான் விரும்பி நடத்துகிறார்கள். இதில் அழகிய விதம் விதமான அரைகுறை உடை அணிந்து பெண்கள், உலகதில் எல்லா இடங்களிலும் நடந்தபடிதான் இருக்கிறது. ஆனால் இந்த அழகி போட்டி வழக்கமான போட்டி போல் இன்றி, வித்தியாசமான ஒரு இனிய அழகிப் போட்டியை கென்யா தலைநகர் நைரோபியில் நடத்தி இருக்கிறார்கள். இது பெண்…
Read More நைரோபியில் மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டிஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது நில அபகரிப்பு புகார்
Land grabbing case against former Vice chancellor of Anna university Mr.Kalanidhi அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடம் ஒன்றை, பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் துணைவேந்தர் அபகரித்துக் கொண்டதாக இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் (ஐ.எஸ்.டி.ஏ.) நிர்வாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது பற்றி இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தினுடைய தலைவர் ஆர்.முருகேசன் (நேற்று) சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சென்ற 1992-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக கழகத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பாக தொழிற்ப்பயிற்சி மையம் ஒன்று கட்டப்பட்டது. இதற்காக தனியாக ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக திரு.நடேசன் என்பவர்…
Read More அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது நில அபகரிப்பு புகார்2 மாதத்திற்கு பிறகு தமிழகம் ஆந்திரா இடையே பேருந்து இயக்கம்
Bus Transport started again between Andhrapradesh and Tamilnadu ஆந்திராவிற்கு கடந்த 2 மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுவதால் திருப்பதி திருமலை பிரமோற்சவத்துக்குச் சென்ற பக்தர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தெலங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆந்திர கடலோர மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பந்த் (வேலை நிறுத்தம்) அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் ஆந்திரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரதேசத்திற்கும் இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு மாததிற்குப்பின் பதற்றம் சற்றே தணிந்து, தற்சமயம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில், சித்தூர் உள்பட்ட ஆந்திரபிரதேச எல்லை மாவட்டங்களுக்கு மட்டும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டன.…
Read More 2 மாதத்திற்கு பிறகு தமிழகம் ஆந்திரா இடையே பேருந்து இயக்கம்இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்பு
The International journalist conference held at Srilanka Capital Colombo கொழும்பு: இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. வேலு பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் பிடித்து வைத்து படுகொலை செய்ததாக பிரபல இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கு: இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஈரான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், மலேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், பூடான், நேபால், மால தீவு, ஆகிய 12 நாடுகளை சார்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபெற்றனர். அப்பொழுது உலக அளவில் புகழ்பெற்ற தி எக்கனோமிஸ்ட் என்ற ஆங்கில இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரை நிகழ்த்திய போது, ‘2009…
Read More இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்புஉ.பி.யில் 1000 டன் தங்க புதையல்! தொல்லியல் துறை ஆய்வு செய்யமுடிவு!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருக்கிறது என தகவல் வெளியானதால் தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்ரப்பிரதேசத்தில் உன்னாவோ மாவட்டம் கேடா எனும் கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற அரசர் வாழ்ந்த கோட்டை ஒன்று உள்ளது. அந்த மன்னர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்து உயிர் துறந்தார். தற்சமயம் அந்த அரசரின் கோட்டை சிதிலமடைந்து இருக்கிறது. எனினும் மன்னரை அந்த பகுதி மக்கள் இன்னும் மறவாமல் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்குள்ள துறவி ஒருவர் தனது கனவில் அரசர் தோன்றி அந்த கோட்டையில் 1000 டன் தங்கப் புதையுண்டு உள்ளதாக கூறினார் என கூறினார். எனினும் இதை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. இருந்தாலும் மத்திய இணை அமைச்சர்…
Read More உ.பி.யில் 1000 டன் தங்க புதையல்! தொல்லியல் துறை ஆய்வு செய்யமுடிவு!உலகம் முழுவதும் ஆண்டிற்கு 55 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பலி
Rabies kills 24,000 a year in Africa because vaccine costly: experts ஆப்பிரிக்காவில் நாய்க்கடிக்கு போடப்படும் தடுப்பூசியை வாங்க வசதியில்லாத மக்கள் அதிக அளவில் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவில் நாய்க்கடி எதிர்ப்பு தடுப்பூசியை வாங்க வசதியற்ற மக்கள் கூடுதலான அளவில் பலியாவது தெரியவந்திருக்கிறது. செனகல் நாட்டு உள்ள தலைநகரான டாகரில் வெறிநாய் கடிக்கு உண்டான மருந்து, அதனை முன்கூட்டியே தடுக்கும் வழி முறை பற்றி நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் நாய்க்கடியினால் ஏற்படும் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 55 ஆயிரம் மக்கள் இறப்பது இறக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. உலகெங்கிலும் நாய் கடியால் பலியாகுபவர்களின் பாதி பேர் ஆப்பிரிக்காவில் இருப்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்காவின் ஆண்டு ஒன்றுக்கு சுமார்…
Read More உலகம் முழுவதும் ஆண்டிற்கு 55 ஆயிரம் பேர் நாய்க்கடியால் பலிதீவிரவாதி பன்னா இஸ்மாயிலுக்கு அறுவை சிகிச்சை 2 குண்டுகள் அகற்றம்
doctors removed bullet from terrorist PannaIsmail body தீவிரவாதி பன்னா இஸ்மாயிலின் உடம்பில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் தோட்டாக்களை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை அகற்ற பட்டுள்ளன.சென்ற சனிக்கிழமை, தமிழக ஆந்திரபிரதேச எல்லை பகுதி புத்தூரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் அவர்களது கூட்டாளிகளை கைது செய்ய முயன்ற போது தமிழக காவல்துறை ஆய்வாளர் லட்சுமணன் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதன் பின்னர் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி பன்னா இஸ்மாயில் காயமடைந்தான். பிறகு, கைது செய்யப்பட்ட அவன், சிகிச்சைக்காக சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான். பயங்கரவாதி பன்னா இஸ்மாயிலின் இரைப்பைக்கும், கணையத்திற்கும் இடையே துப்பாக்கி தோட்டா பாய்ந்திருந்ததால், அதை அகற்றுவது ஆபத்தானது என கருதி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தாமதபடுத்தி வந்தார்கள். தேவையான…
Read More தீவிரவாதி பன்னா இஸ்மாயிலுக்கு அறுவை சிகிச்சை 2 குண்டுகள் அகற்றம்தூத்துக்குடி அருகில் சுற்றி வளைக்கப்பட்ட தனியார் போர்க்கப்பல்!
American private war ship found near Indian sea area near Tuticorin port, Tamilnadu. The investigation is going on regarding the illegal entry of the American vessel தூத்துக்குடி: தூத்துக்குடி அருகில் தனியார் போர்க் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது என பரபரப்பான செய்திகள் வெளியாகிஇருக்கிறது. தூத்துக்குடி அருகே கடலில் கடலோர காவல்படையினர் நேற்று ரோந்து சென்றார்கள். அப்பொழுது ஒரு மர்ம கப்பல் நடுக்கடலில் நிலை கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த கப்பல் சுற்றி வளைக்கப்பட்டது. தற்போது தூத்துக்குடி துறைமுகம் அருகே அந்த தனியார் போர் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது. தனியார் போர் கப்பல் என்பதால் பல்வேறு துறையில் உள்ள அரசு அதிகாரிகளும் தூத்துக்குடி நகரில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இலங்கையில் சீன ஆதிக்கம் அதிகம் இருப்பதால், அங்கே இருந்து இந்திய கடற்பரப்புக்குள்…
Read More தூத்துக்குடி அருகில் சுற்றி வளைக்கப்பட்ட தனியார் போர்க்கப்பல்!

