பெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவும் கருவி கண்டுபிடிப்பு..

Fear-sensing device to aid distressed women  உலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனியாக பெண்கள் போகும் போதோ அல்லது வேலையிடங்களில் ஏதேனும் தொல்லைகள் காரணமாக அவர்களுக்கு பயம் இருந்தால் அதனை பதிவு செய்துகொள்ளும் ஒரு கருவியை தெற்கு தில்லியில் உள்ள திரு.யாஷ்பாட்டியா என்ற வல்லுநர் கண்டுபிடித்திருக்கிறார். தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்று பயிற்சி பெற்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்திருக்கும் இந்த கருவி புளூடூத் தொழில் நிட்பம் கொண்டதாகும். சுமார், 7 கிராம் எடையுடன் சதுர வடிவினில் இருக்கும் இந்த சாதனம் ரீச்சார்ஜ் செய்த கொள்ள கூடிய பேட்டரிகள் களை கொண்டதாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த கருவி இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதம் போன்றவைகளை கண்டு கணக்கிட உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல்…

Read More பெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவும் கருவி கண்டுபிடிப்பு..

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தரவரிசையில் இந்தியா 2வது இடம்

India’s RTI Act second best in the world   வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமாக ஓர் ஆய்வு நடத்தது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட 95 நாடுகளில் நடந்த இந்த ஆய்வினில் இந்தியா 2வது இடத்திலும் செர்பியா முதலாவது இடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திடம் அல்லது அரசாங்கத்திடம் இருந்து உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையோடு தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக உருவாக்க பட்ட சட்டம் தான் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’. இந்தியாவில் இந்த சட்டம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005ம் ஆண்டு மே 11ம் தேதி மக்களவையிலும், 2005ஆம் ஆண்டு மே 12,ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005ம் ஆண்டு, ஜூன் 15 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, 2005-ம் ஆண்டு,…

Read More தகவல் அறியும் உரிமைச்சட்டம் தரவரிசையில் இந்தியா 2வது இடம்

சிங்கப்பூர் மாடல் அழகி பாகிஸ்தானில் கொலை.. ஓடையில் சடலம் மீட்பு

Missing Singapore model found dead in Pakistan சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மாடல் அழகி ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார். ஓடையில் வீசப்பட்ட அவரது உடலை காவல் துறையினர்  கண்டுபிடித்துள்ளனர். ஃபெஹ்மினா சவுத்ரி, பாகிஸ்தான் மாடல் அழகி. அவருக்கு 27 வயது. சிங்கப்பூரில் நடந்த அழகி போட்டியில் அழகு ராணியாக தேர்வு பெற்ற  ஃபெஹ்மினா சவுத்ரி, கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் தலைநகரான   இஸ்லாமாபாத் நகரில் தனது தாயாரின் பெயரில் ஒரு சொத்து வாங்க  பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றார். ஃபெஹ்மினா சவுத்ரியின் தாய் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த போதிலும், பாகிஸ்தான் பயணம் அனைத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இந்த வகையில், தான் இஸ்லாமாபாத் வந்த செய்தியை தனது தாயாருக்கு கைபேசியில் அழைத்து கூறியிருக்கிறார் ஃபெஹ்மினா சவுத்ரி.…

Read More சிங்கப்பூர் மாடல் அழகி பாகிஸ்தானில் கொலை.. ஓடையில் சடலம் மீட்பு

மூத்த பத்திரிகையாளர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: தலைவர்கள் இரங்கல்

Senior Journalist Mr Ramachandra adhithan died today in residence at chennai Adyar. His age is 80 years மாலைமுரசு நிர்வாக ஆசிரியரம் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள். பா ராமச்சந்திர ஆதித்தனுக்கு வயது 80. தமிழர்களின் தந்தை என்று அழைக்க பட்டவரும் பிரபல பத்திரிக்கையான தினத்தந்தி நிறுவனருமான சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் திரு.பா ராமச்சந்திர ஆதித்தனாகும். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி எனும் ஊரில் பிறந்தவர். தனது தந்தை ஆதித்தனாரின் வழியை பின் பற்றி பத்திரிகைத் துறையினில் ஐக்கியமான இவர் மாலை முரசு என்ற மாலை நேர பத்திரிக்கையை ஆரம்பித்து அதற்கு உரிமையாளர் ஆனார். மேலும், பிறகு அவர் தேவி எனும் வார இதழ்…

Read More மூத்த பத்திரிகையாளர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: தலைவர்கள் இரங்கல்

பிலிப்பைன்சில் பயங்கர நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 பதிவு: 95 பேர் பலி

Deadly earth quake hits Philippine in Bohol and Cebu மணிலா:- பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கத்தில் சுமார் 95 பேர் பலியானார்கள். அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆயின.  பிலிப்பைன்சில் சுற்றுலா மையமான சிபு மாகாணத்தில் நேற்று காலை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கியது. அதனால் பீதியும் பதட்டமும் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்குச்சென்று தஞ்சம் அடைந்தனர். இந்நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடுமையான சேதம் அடைந்துள்ளது. வீடுகள் மற்றும் ஏனைய  கட்டிடங்கள் யாவும் அதிர்ந்து சரிந்து  விழுந்ததில் 12 பேர் பலியானார்கள். இந்த நில அதிர்வினால் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் முன்னாள் சிட்டிஹால் உள்பட பல்வேறு புராதன சின்னங்கள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து சரிந்து விழுந்தது. சிபு அருகே…

Read More பிலிப்பைன்சில் பயங்கர நிலஅதிர்வு ரிக்டர் அளவில் 7.2 பதிவு: 95 பேர் பலி

9 வயது சிறுமியை பொம்மை தருவதாக ஏமாற்றி பாலியல் கொடுமை

9-year-old raped in Chennai சென்னையில் 9 வயது நிரம்பிய சிறுமியை 32 வயதுடைய கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரம் அவரை போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். சென்னையிலுள்ள மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி திருமதி.ரோஜா பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமதி.ரோஜா தனது தாய் சகுந்தலாவை பழக்கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டில் இருந்தார்.ரோஜாவின் 9 வயது மகள்  பள்ளி விடுமுறை என்பதால் பாட்டியுடன் கடைக்கு போனார். மதியம் சுமார் 3 மணி அளவில் அவர்களது கடைக்கு வந்த சுரேஷ் என்ற லோடு ஆட்டோ ஓட்டுனர் சிறுமியிடம் பேசியுள்ளார். தான் அவளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமி அவருடன் போகட்டுமா என பாட்டியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பாட்டி பழ வியாபாரத்தில் ஆர்வமாக…

Read More 9 வயது சிறுமியை பொம்மை தருவதாக ஏமாற்றி பாலியல் கொடுமை

பள்ளிவளாகத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

school girl immolated herself in Kanchipuram காஞ்சிபுரதை அடுத்து உள்ள திருவண்ணாமலை மாவட்டம் தூசி எனும்   ஊருக்கு அருகில் அப்துல்லாபுரம் தோப்புத் தெருவைச் சேர்ந்த நபர் கன்னியப்பன்.  ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு  தேன்மொழி மனைவியும், இந்த தம்பதியினருக்கு கல்லூரி படிப்பு படிக்கும் ஒரு மகளும், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு பயிலும் சினேகா (வயது 11) என்ற மகளும் உள்ளார்கள். கன்னியப்பன் தனது ஆட்டோவில் தினமும் தனது  மகள் சினேகாவை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு சென்று, மாலை வேலையில் பள்ளி முடிந்தவுடன் அழைத்துச் போவது வழக்கம். இந்நிலையில் செவ்வாயன்று எப்போதும் போல், பள்ளிகூடத்திற்கு  வந்த மாணவி சினேகா, பள்ளி இடைவேளை நேரத்தில் கழிவறைக்குள் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி…

Read More பள்ளிவளாகத்தில் 6 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

21 கோடி இந்திய மக்கள் பட்டினியால் அவதி: புதிய ஆய்வு அறிக்கை

India home to a quarter of the world’s hungry உலகத்தில் பசியில் வாடும் மக்கள் தொகையில் கால்வாசி பேர் இந்திய நாட்டில் வாழ்வதாக குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெள்யீடு செய்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடபட்டிருக்கிறது. 2011-2013 ஆண்டுகளில்  உலகத்தில் 842 மில்லியன் மக்கள் பசியினால் வடிகொண்டு இருக்கிறார்கள் என குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2010-2012ம் ஆண்டோடு (சுமார் 870 மில்லியன்) இந்த எண்ணிக்கையை  ஒப்பிடும்போது சற்று குறைவு தான். 120 நாடுகளை சேர்ந்த மக்களை கணக்கில் எடுத்து அதில் எவ்வளவு மக்கள் பசியால் வாடுகின்றனர் என கணக்கிடப்பட்டிருக்கிறது. கடந்த 2006-ல் இருந்து ஊட்டச்சத்து குறையுள்ள மக்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளில் எடை மிக குறைவாக இருப்போர், ஐந்து…

Read More 21 கோடி இந்திய மக்கள் பட்டினியால் அவதி: புதிய ஆய்வு அறிக்கை

ஆஸ்திரேலியாவில் பி.எச்.டி படிக்கும் இந்திய மாணவி திடிரென மாயம்

Indian student goes missing in Australia ஆஸ்திரேலிய நாட்டில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயிலும் 30 வயது இந்திய மாணவி ஒருவர் திடீரென காணமல் போனது அங்கு பரபரப்பை ஏற்படுத்திஇருக்கிறது. இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட 30 வயதுடைய மாணவி நடாஷா நரங், ஆஸ்திரேலியாவில் இருக்கும் டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தனது கணவர் திரு. சந்தீப்புடன் டாஸ்மானியா மாநிலத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி முதல் அவர் காணாமல் போய்விட்டார் , ஆதலால் அந்நாட்டு காவல் துறையினரிடம் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில், அவரது உடமைகள் யாவும் டாஸ்மானியா மாநிலத்தில் இருக்கும் ஓர் ஆற்றங்கரை ஓரமாக கிடந்தததை கண்டுபிடித்தார்கள். எனினும்,…

Read More ஆஸ்திரேலியாவில் பி.எச்.டி படிக்கும் இந்திய மாணவி திடிரென மாயம்

டெல்லிக்கு போய்கொண்டிருந்த இரயிலில் சமையல் அறையில் தீ விபத்து

Major fire breaks out in Dibrugarh-New Delhi Rajdhani Express அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகாரில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை கவுகாத்தி அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீ விபத்துக்கு உள்ளானது. அந்த இரயிலில் இருந்த 2 சமையல் அறைகளில் தீப்பற்றிகொண்டது . பின்னர் அந்த இரயில் தரம்தூல் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. ஏனைய  பெட்டிகளில் இருந்து தீ பற்றிய இரண்டு பெட்டிகள் மட்டும் தனியாக கழற்றி விடப்பட்டன. பின்னர் தீ அணைப்பு படை வீரர்கள் அங்கே வந்து தீ மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தார்கள். இந்த தீ விபத்து  மின்சார கோளாறின் காரணமாக ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது. விரைவாக கண்டு பிடித்து அந்த தீயை அணைத்ததால் உயிர் சேதம் ஏதும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது.…

Read More டெல்லிக்கு போய்கொண்டிருந்த இரயிலில் சமையல் அறையில் தீ விபத்து