9 வயது சிறுமியை பொம்மை தருவதாக ஏமாற்றி பாலியல் கொடுமை

9-year-old raped in Chennai

9-year-old raped in Chennai

சென்னையில் 9 வயது நிரம்பிய சிறுமியை 32 வயதுடைய கொடூரன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரம் அவரை போட்டுவிட்டுச் சென்றுவிட்டான்.

சென்னையிலுள்ள மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி திருமதி.ரோஜா பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமதி.ரோஜா தனது தாய் சகுந்தலாவை பழக்கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வீட்டில் இருந்தார்.ரோஜாவின் 9 வயது மகள்  பள்ளி விடுமுறை என்பதால் பாட்டியுடன் கடைக்கு போனார்.

மதியம் சுமார் 3 மணி அளவில் அவர்களது கடைக்கு வந்த சுரேஷ் என்ற லோடு ஆட்டோ ஓட்டுனர் சிறுமியிடம் பேசியுள்ளார். தான் அவளுக்கு பொம்மை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமி அவருடன் போகட்டுமா என பாட்டியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் பாட்டி பழ வியாபாரத்தில் ஆர்வமாக இருந்ததால் இதை கவனிக்கவில்லை. இதை பயன் படுத்தி கொடூரன் சுரேஷ் சிறுமியை ஆட்டோவில் அழத்து சென்றுள்ளான். சுரேஷ் அந்த சிறுமியை செம்மனஞ்சேரிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சாலையோரமாக போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

சாலையோரமாக ரத்தப்போக்கு உண்டாகி சிறுமி கிடப்பதை கண்ட பொதுமக்கள் நடந்த சம்பவத்தை விசாரித்து சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அன்று இரவு காமகொடூரன் சுரேஷை கைது செய்தார்கள்.

9-year-old raped in Chennai

Related posts