பெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவும் கருவி கண்டுபிடிப்பு..

Fear-sensing device to aid distressed women

Fear-sensing device to aid distressed women

 உலகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனியாக பெண்கள் போகும் போதோ அல்லது வேலையிடங்களில் ஏதேனும் தொல்லைகள் காரணமாக அவர்களுக்கு பயம் இருந்தால் அதனை பதிவு செய்துகொள்ளும் ஒரு கருவியை தெற்கு தில்லியில் உள்ள திரு.யாஷ்பாட்டியா என்ற வல்லுநர் கண்டுபிடித்திருக்கிறார்.

தில்லி தேசிய நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி பயின்று பயிற்சி பெற்ற பட்டதாரியான இவர் கண்டுபிடித்திருக்கும் இந்த கருவி புளூடூத் தொழில் நிட்பம் கொண்டதாகும். சுமார், 7 கிராம் எடையுடன் சதுர வடிவினில் இருக்கும் இந்த சாதனம் ரீச்சார்ஜ் செய்த கொள்ள கூடிய பேட்டரிகள் களை கொண்டதாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த கருவி இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் சுவாச விகிதம் போன்றவைகளை கண்டு கணக்கிட உதவுகிறது.

அதுமட்டும் இல்லாமல் மேலும் இந்த கருவியை பொருத்திக் கொண்ட பெண்கள் தங்களது வாழ்வில் அச்சுறுத்தும் நிகழ்வுகள் வரும் பொழுது அச்சம் மற்றும் நடுக்க உணர்வை நீக்கி பிரச்சனைகளை எதிர்க்கும் சக்தியை கொடுத்து உடலியல் மற்றும் மனரீதியான மாற்றங்களை தருகிறது என வல்லுநர் திரு.பாட்டியா தெரிவிக்கிறார்.

கூட்ட நெரிசல் மிகுந்த பொது இடங்களில் சிக்கி திடீரென ஏற்படும் பதட்டத்தில் பெண்கள் ஆபத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இது மிகுந்த உதவியாக இருக்கும். மேலும் வெளியில் செல்லும் போது பெண்கள் இந்த கருவியை பொருத்திக்கொண்டால், அவர்கள் எதாவது பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் போது இந்த கருவி அந்த பெண்ணுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களினுடைய கைபேசிக்கு மின் அணு மூலமாக குறுந்தகவல் அனுப்பும் ஆற்றல் பெற்றது என்றும் வல்லுநர் திரு.பாட்டியா தெரிவித்திருக்கிறார்.

Fear-sensing device to aid distressed women

Rise in crimes against women made 37-year-old south Delhi-based Yash Bhatia realise that protests alone don’t work. Putting himself in the shoes of the victims, the National Institute of Fashion Technology graduate has devised a sensor that records bodily changes that occur when a person is in a crisis.

Related posts