திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் : சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம்

Transgenders are the ‘third gender’, rules Supreme Court

Transgenders are the 'third gender', rules Supreme Court

திருநங்கைகளை 3-வது பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட் திருநங்கைகளுக்கு சிறப்பு பொது கழிப்பறைகளை கட்டவும், அவர்களின் மருத்துவ பிரச்னைகளை கவனிக்க சிறப்பு துறைகளை அமைக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுநாள் வரை திருநங்கைகள் தங்களது பாலினத்தை ஆண் அல்லது பெண் ஆக குறிப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த நிலையில், இத்தீர்ப்பு அவர்களுக்கு சமூக அங்கீகாரத்தை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்தியாவில் உள்ள திருநங்கைகளுக்கு. மூன்றாம் பாலின அந்தஸ்து வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் இறுதியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் திருநங்கைகளை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக கருத வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ள நீதிபதிகள், அவர்களுக்கு தேவையான கல்வி வசதிகள் மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வழிவகுக்கவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களின் சமூக மேம்பாட்டிற்காக திட்டங்களை மத்திய மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பாக திருநங்கைகளுக்கு என பிரத்யேக கழிப்பறைகளும் அவர்களுக்கு தேவையான சிறப்பு மருத்துவ உதவிகளும் ஏற்படுத்தி தர மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை கூறியுள்ளது.

அத்துடன் இனிமேல் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாவது பாலினம் என்ற அடிப்படையில் திருநங்கைகள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக (OBC) கருதி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் கோர்ட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இனியும் திருநங்கைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இது தொடர்பான சட்டதிருத்தத்தை இன்னும் 6 மாத காலத்திற்குள் கொண்டுவருவதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.மேலும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், சமூக நலத்திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Transgenders are the ‘THIRD GENDER’, rules Supreme Court

The Supreme Court today acknowledged a third gender that is neither male nor female in a landmark judgement that asks the government to make sure that transgenders get job quotas and facilities including a voter card, passport and driving licence.    “Recognition of transgenders as a third gender is not a social or medical issue but a human rights issue,” the court said today, asking the Centre to treat transgenders as “socially and economically backward”, to enable them to get reservations in jobs and education.  “Transgenders are also citizens of India. It is the right of every human being to choose their gender. The spirit of the Constitution is to provide equal opportunity to every citizens to grow and attain their potential, irrespective of caste, religion or gender,” the court said.  The case was filed in 2012 by a group of petitioners including prominent eunuch and activist Laxmi Narayan Tripathi seeking equal rights for the transgender population under the law.   The court expressed concern at the discrimination and said the Centre and states must work to raise awareness and end any perceived stigma. This ruling comes four months after the same court reinstated a colonial-era ban on gay sex, in a widely criticised decision.  Gay sex had been effectively legalised in 2009 when the Delhi High Court ruled that a section of the penal code prohibiting “carnal intercourse against the order of nature” was an infringement of fundamental rights.  Former Election Commission SY Quraishi said, “When the Election Commission recognised transgender as the ‘other’ gender besides male and female, one million of them got empowered. The Supreme Court has endorsed it.”  The Election Commission had issued voters’ cards for the first time to transgenders last year.

Related posts