தகவல் அறியும் உரிமைச்சட்டம் தரவரிசையில் இந்தியா 2வது இடம்

India’s RTI Act second best in the world

India’s RTI Act second best in the world

  வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமாக ஓர் ஆய்வு நடத்தது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட 95 நாடுகளில் நடந்த இந்த ஆய்வினில் இந்தியா 2வது இடத்திலும் செர்பியா முதலாவது இடத்திலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்திடம் அல்லது அரசாங்கத்திடம் இருந்து உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையோடு தகவல்களை அறிந்து கொள்ள ஏதுவாக உருவாக்க பட்ட சட்டம் தான் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’. இந்தியாவில் இந்த சட்டம் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு 2005ம் ஆண்டு மே 11ம் தேதி மக்களவையிலும், 2005ஆம் ஆண்டு மே 12,ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. 2005ம் ஆண்டு, ஜூன் 15 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, 2005-ம் ஆண்டு, ஜூன் மாதம்  21ம் தேதியன்று அரசுப் பதிவு இதழில் வெளியிடப்பட்டது. மேலும் இது 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்த சுழ்நிலையில் உலகத்தில் உள்ள எல்லா பகுதிகளிலும் இச்சட்டத்தின் செயல்பாடுகளின் தரம் பற்றி கனடா மற்றும் ஐரோப்பியாவை ச் சேர்ந்த இரண்டு மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வினில் 135 புள்ளிகள் பெற்று செரிபியா நாடு முதல் இடத்திலும், 130 புள்ளிகள் பெற்று இந்தியா 2வது இடத்திலும் இருக்கிறது.
இந்த ஆய்வினில் சட்டத்தினுடைய நடைமுறைகள், மறுப்புகள் மற்றும் விதிவிலக்குகள், பாதுகாப்புகள் மற்றும் ஊக்குவிப்பு, முறையீடுகள், பொருளாதார தடைகள், அணுகுமுறைகள், நடவடிக்கைகள், உள்ளிட்ட 7 காரணிகள் கொடுக்கப்பட்டன.

மேலும் இது பற்றி கூறிய திரு.பாஸ்கர் பிரபு சட்டத்தில் வெளிப்படையான  தன்மை குறைவாக உள்ளதால் சட்ட கட்டமைப்பு பற்றி தவறான புரிதல் உள்ளது. ஆகவே தகவல் அறியும் உரிமைச்சட்டம் சம்பந்தமாக  நகரங்களில் விழிப்புணர்வு அரங்கங்கள், வகுப்புகள் நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த ஆய்வு அறிக்கையின் முடிவு வளரும் நாடுகளை ஒப்பிடும் போது வளர்ந்த நாடுகளுக்கு ஓர் ஆச்சரியமான முடிவையே கொடுக்கிறது. வளர்ந்த நாடுகளில் இந்த சட்டத்தின் முறையீடுகள் முறையான வகையில் இல்லை என்பதையும் இது காட்டுகிறது.

India’s RTI Act second best in the world

India’s RTI Act second best in the world

ndia’s Right to Information Act has been ranked second in a survey of information laws in 95 countries, in which developed countries, such as the US and UK, ranked far behind developing nations.

Related posts