Missing Singapore model found dead in Pakistan
சிங்கப்பூர் அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் மாடல் அழகி ஒருவர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்தார். ஓடையில் வீசப்பட்ட அவரது உடலை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஃபெஹ்மினா சவுத்ரி, பாகிஸ்தான் மாடல் அழகி. அவருக்கு 27 வயது. சிங்கப்பூரில் நடந்த அழகி போட்டியில் அழகு ராணியாக தேர்வு பெற்ற ஃபெஹ்மினா சவுத்ரி, கடந்த வியாழன் அன்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் நகரில் தனது தாயாரின் பெயரில் ஒரு சொத்து வாங்க பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றார்.
ஃபெஹ்மினா சவுத்ரியின் தாய் பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த போதிலும், பாகிஸ்தான் பயணம் அனைத்திலும் நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். இந்த வகையில், தான் இஸ்லாமாபாத் வந்த செய்தியை தனது தாயாருக்கு கைபேசியில் அழைத்து கூறியிருக்கிறார் ஃபெஹ்மினா சவுத்ரி. எனினும், பின்னர் அவரது கைபேசியை தொடர்பு கொள்ள முயன்ற அவரது தாயார் அது அணைத்து வைக்கப்பட்டது என தெரியவந்திருக்கிறது. அதன் பின் சிறிது நேரம் கழித்து ஃபெஹ்மினா சவுத்ரியின் கைபேசியில் இருந்து அவர் கடத்தபட்டுள்ளார் என குறுந்தகவல் செய்தி வந்ததாக காவல்துறையில் அவருடைய தாய் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரை அடிப்படையாக கொண்டு காவதுறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது, ஃபெஹ்மினா சவுத்ரிக்கு சொத்து வாங்கி கொடுப்பதாக கூறிய ரியல் எஸ்டேட் புரோக்கரைக் காவதுறையினர் கைது செய்தார்கள். அந்த புரோக்கரிடம் நடந்த விசாரணையில், ஃபெஹ்மினா சவுத்ரியை தான் கொலை செய்து, அவரது உடலை அருகே இருக்கும் ஓடை ஒன்றில் வீசியதை ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒத்துக் கொண்டார் என காவல்துறையினர் தெரிவித்தார்கள். பின்னர் உடனடியாக கொலைநடந்த இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஓடை கரைஓரத்தில் ஒதுங்கியிருந்த ஃபெஹ்மினா சவுத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த கொலை சம்பவத்திற்கான காரணம் பற்றி தெளிவான அறியப்படவில்லை. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Missing Singapore model found dead in Pakistan
Pakistani police officials on Tuesday announced that the dead body of a model and beauty queen from Singapore was found in capital Islamabad. Fehmina Chaudhry, 27, was originally from Karachi city of Pakistan and was based in Singapore. She went missing last Thursday after visiting Islamabad to buy property. Fehmina was looking to o open a fashion school in Pakistan. She was reportedly kidnapped by the real estate broker Muaz Wqar, who lured her and brought her to Pakistan. Asif Hashmi, Fehmina Chaudry’s promoter told AFP, “She was a dedicated philanthropist and she was planning to set up a fashion school in Pakistan.” Islamabad police spokesman Muhammad Naeem quoted by AFP said, “Police arrested the real estate broker and after interrogation, he told officers that he had murdered the model and dumped her body in a stream at the outskirts of the city.” Another police officer, Yasir Afridi, said Chaudhry’s mother had contacted her for the last time on the evening of October 10, after which she received a text message saying her daughter had been kidnapped.