மூத்த பத்திரிகையாளர் பா.ராமச்சந்திர ஆதித்தன் மரணம்: தலைவர்கள் இரங்கல்

Senior Journalist Mr Ramachandra adhithan died today in residence at chennai Adyar. His age is 80 years

மாலைமுரசு நிர்வாக ஆசிரியரம் ஆசிரியரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு பா.ராமச்சந்திர ஆதித்தன் இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு மூத்த தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

Senior Journalist Mr Ramachandra adhithan died today morning in chennai

பா ராமச்சந்திர ஆதித்தனுக்கு வயது 80. தமிழர்களின் தந்தை என்று அழைக்க பட்டவரும் பிரபல பத்திரிக்கையான தினத்தந்தி நிறுவனருமான சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகன் திரு.பா ராமச்சந்திர ஆதித்தனாகும். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி எனும் ஊரில் பிறந்தவர்.

தனது தந்தை ஆதித்தனாரின் வழியை பின் பற்றி பத்திரிகைத் துறையினில் ஐக்கியமான இவர் மாலை முரசு என்ற மாலை நேர பத்திரிக்கையை ஆரம்பித்து அதற்கு உரிமையாளர் ஆனார். மேலும், பிறகு அவர் தேவி எனும் வார இதழ் ஒன்றை துவக்கினார். பின்னர், தேவியின் கண்மணி, பெண்மணி எனும் ஏனைய இதழ்கள் பலவற்றை ஆரம்பித்தார்.

தமிழ் பத்திரிக்கைகளில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கிய புதுமையான தினசரி நாளிதழான கதிரவன் பத்திரிக்கையை சென்னை மற்றும் திருநெல்வேலியிலும் ஆரம்பித்தார். அந்த நாளில் உடனடி உயர்வுக்கு வந்த தினசரி நாளிதழ் “கதிரவன்” குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள அடையார் பகுதியில் வாழ்ந்து வந்த திரு. பா.ராமச்சந்திர ஆதித்தன், இன்று காலையில் லேசாக நெஞ்சு வலி இருப்பதாக தெரிவித்திருக்கிறார், பின்னர் அடுத்த சில வினாடிகளில் அவருடைய உயிர் பிரிந்தது.

திரு பா.ராமச்சந்திர ஆதித்தனின்  மறைவுக்கு பல மூத்த முன்னணி அரசியல் தலைவர்களும் திரைப்பட துறையினர் மற்றும் பிரபலங்களும், முக்கியமான பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Senior Journalist Mr Ramachandra adhithan died today in residence at chennai Adyar. His age is 80 years

Related posts