அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீது நில அபகரிப்பு புகார்

Land grabbing case against former Vice chancellor of Anna university Mr.Kalanidhi அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான இடம் ஒன்றை, பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் துணைவேந்தர் அபகரித்துக் கொண்டதாக இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் (ஐ.எஸ்.டி.ஏ.) நிர்வாக அதிகாரிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். இது பற்றி இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தினுடைய தலைவர் ஆர்.முருகேசன் (நேற்று) சனிக்கிழமை பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சென்ற 1992-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழக கழகத்திற்கும் இடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் படி பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம், இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம் சார்பாக தொழிற்ப்பயிற்சி மையம் ஒன்று கட்டப்பட்டது. இதற்காக தனியாக ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக திரு.நடேசன் என்பவர்…

Read More