இலங்கை இராணுவம் தான் சிறுவன் பாலச்சந்திரனைக் கொன்றது: பத்திரிக்கையாளர் மாநாட்டில் அறிவிப்பு

The International journalist conference held at Srilanka Capital Colombo

கொழும்பு: இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் திரு. வேலு பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் பிடித்து வைத்து படுகொலை செய்ததாக பிரபல இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

The International journalist conference held at Srilanka

இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கு:

இலங்கை  தலைநகர் கொழும்பில் நடந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான கருத்து அரங்கத்தில் பாகிஸ்தான், இந்தியா, ஈரான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், மலேசியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, சிங்கப்பூர், பூடான், நேபால், மால தீவு, ஆகிய 12 நாடுகளை சார்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபெற்றனர்.

அப்பொழுது உலக அளவில் புகழ்பெற்ற தி எக்கனோமிஸ்ட் என்ற ஆங்கில  இதழின் தெற்காசியப் பிரிவு பொறுப்பாளர் அடம் ராபர்ட்ஸ் உரை நிகழ்த்திய போது, ‘2009 மே மாதம் இலங்கை இறுதிக்கட்ட போரில், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் இளைய புதல்வனான   12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை  இராணுவத்தினர் படுகொலை செய்தார்கள்.

 சர்வதேச போர் குற்றவாளிகளான இலங்கைப் படை

சர்வதேச போர் குற்றவாளிகளான இலங்கைப் படையை சார்தவர்கள் படுகொலைகளை செய்த வீடியோ காட்சிகளை வெளியிடாமல் இருந்திருந்தால், இறுதிக்கட்ட போரின் முடிவில் சிறை பிடிக்கப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்கள், கைகள் பின்புறம் கட்டி படுகொலை செய்தது உலகுக்கு தெரிந்திருக்காது.

இலங்கை மாகாண சபைத் தேர்தல்

சமீபத்தில் இலங்கை மாகாண சபைத் தேர்தல் பற்றி செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த பொழுது, யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழ் மக்களிடம் பேச வாய்ப்பு கிட்டியது. அவர்கள்  இராணுவப் புலனாய்வு பிரிவு பற்றி மிகுந்த  அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார்கள். இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழும் மக்கள் 2009 மே மாதம் இறுதி போர் முடிவு பெற்ற போதிலும், முரண்பாடுகள் இன்னும் தீர்க்க படவில்லை என கருதுகிறார்கள்’ என்று அவர் தெரிவித்தார்.

English summary:

The International journalist conference held at Srilanka Capital Colombo confirmed that the war crime of Srilankan army in which LTTE leader Prabakaran’s  son Balachandren was murdered by the army

The International journalist conference held at Srilanka Capital Colombo

Related posts