2 மாதத்திற்கு பிறகு தமிழகம் ஆந்திரா இடையே பேருந்து இயக்கம்

Bus Transport started again between Andhrapradesh and Tamilnadu

Bus Transport started again between Andhra pradesh and Tamil nadu

ஆந்திராவிற்கு கடந்த 2 மாதங்களுக்குப் பின் தமிழ்நாட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படுவதால் திருப்பதி திருமலை பிரமோற்சவத்துக்குச் சென்ற பக்தர்கள் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். தெலங்கானா பகுதியை தனி மாநிலமாக பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆந்திர கடலோர மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பந்த் (வேலை நிறுத்தம்) அறிவிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 31-ம் தேதி முதல் ஆந்திரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகளும், தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா பிரதேசத்திற்கும்  இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஒரு மாததிற்குப்பின் பதற்றம் சற்றே தணிந்து, தற்சமயம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பில், சித்தூர் உள்பட்ட ஆந்திரபிரதேச எல்லை மாவட்டங்களுக்கு மட்டும் ஒருசில பேருந்துகள் இயக்கப்பட்டன.  இந்த நிலையில், ஆந்திரபிரதேசத்தின் சீமாந்திரா மாவட்டங்களில் 72 மணி நேர (வேலைநிறுத்தம்) பந்த் நடத்த ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் வேறு சில தெலுங்கு அமைப்புகளும் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர்.04) அழைப்பு விடுத்தன. ஆதலால், அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்தது. தமிழ்நாட்டின் எல்லை யில் உள்ள ஆந்திரா பகுதிகள் வரை இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், திருப்பதி திருமலை பிரமோற்சவத்துக்கு தமிழ்நாட்டில் இருந்து பக்தர்கள் போக முடியாமல் அவதிக்கு உள்ளனார்கள். அதே சமயம், தொடச்சியாக 2 மாதங்களுக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படாததால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (விழுப்புரம் கோட்டம்) சுமார் ரூ. 6 கோடிக்கும் அதிகமாக இழப்பை சந்தித்தது.

இந்நிலையில், ஆந்திராவின் சீமாந்திராவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திராவின் மாநில போக்குவரத்து ஊழியர்கள் எல்லோரும் சனிக்கிழமை காலை வேலைக்கு சென்றனர். அதனால், அங்கு அனைத்து பேருந்துகளும் இயங்கத் தொடங்கியது. அங்கு பேருந்துகள் இயக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்தும் நேற்று (சனிக்கிழமை) காலை முதல் வழக்கமான பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இது பற்றி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டத்து நிர்வாக இயக்குநர் கூறியிருப்பதாவது: ஆந்திராவின் சீமாந்திராவில் போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஊழியர்கள் வேலைக்குத் திரும்பி சென்றதால், அங்கு அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக திருப்பதி உள்ளிட்ட ஆந்திரபிரதேசத்தின் ஏனைய பகுதிகளுக்கு இயக்கப்படும் சுமார் 120 பேருந்துகளும் நேற்று (சனிக்கிழமை) காலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Bus Transport started again between Andhrapradesh and Tamilnadu

Related posts