லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உள்ள சிதிலமடைந்த கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கப் புதையல் இருக்கிறது என தகவல் வெளியானதால் தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்ரப்பிரதேசத்தில் உன்னாவோ மாவட்டம் கேடா எனும் கிராமத்தில் ராஜா ராவ் ராம் பாக்சிங் என்ற அரசர் வாழ்ந்த கோட்டை ஒன்று உள்ளது. அந்த மன்னர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர் புரிந்து உயிர் துறந்தார். தற்சமயம் அந்த அரசரின் கோட்டை சிதிலமடைந்து இருக்கிறது. எனினும் மன்னரை அந்த பகுதி மக்கள் இன்னும் மறவாமல் இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் அங்குள்ள துறவி ஒருவர் தனது கனவில் அரசர் தோன்றி அந்த கோட்டையில் 1000 டன் தங்கப் புதையுண்டு உள்ளதாக கூறினார் என கூறினார். எனினும் இதை யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. இருந்தாலும் மத்திய இணை அமைச்சர் சரண் தாஸ் மகத்திடம் இந்த கதையை கூறி அவரை நம்ப வைத்து, அதை தொடர்ந்து மத்திய அமைச்சரின் உத்தரவின் பேரில் தொல்லியல் துறையினர், 1000 டன் தங்கப் புதையலை தேடும் வேலையை தொடங்க உள்ளனர். இம்மாதம் வருகின்ற 18-ந் தேதி முதல் இந்த பணி தொடங்கப்படவுள்ளது.
English summary: In Daundiya Kheda village of Unnao district at Uttar Pradesh state, the Archaeological Survey of India is set to start excavation for a thousand tonne gold treasure after a Hindu saint dream about that. The Hindu Saint Shobhan Sarkar said that he dreamed that thousand tonnes of gold is buried in the remaining part of the Raja Rao Ram Bux Singh fort. He then approached the Union minister and informed him finally convinced that the wealth will help solve many of the country’s financial problems.