doctors removed bullet from terrorist PannaIsmail body
தீவிரவாதி பன்னா இஸ்மாயிலின் உடம்பில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் தோட்டாக்களை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை அகற்ற பட்டுள்ளன.சென்ற சனிக்கிழமை, தமிழக ஆந்திரபிரதேச எல்லை பகுதி புத்தூரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் மற்றும் அவர்களது கூட்டாளிகளை கைது செய்ய முயன்ற போது தமிழக காவல்துறை ஆய்வாளர் லட்சுமணன் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதன் பின்னர் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, காவல் துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி பன்னா இஸ்மாயில் காயமடைந்தான். பிறகு, கைது செய்யப்பட்ட அவன், சிகிச்சைக்காக சென்னை இராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டான்.
பயங்கரவாதி பன்னா இஸ்மாயிலின் இரைப்பைக்கும், கணையத்திற்கும் இடையே துப்பாக்கி தோட்டா பாய்ந்திருந்ததால், அதை அகற்றுவது ஆபத்தானது என கருதி அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தாமதபடுத்தி வந்தார்கள். தேவையான அளவு ரத்தம் பயங்கரவாதி பன்னா இஸ்மாயிலின் உடம்பில் செலுத்திய நிலையில், இன்று மீண்டும் அறுவை சிசிச்சை செய்யப்பட்டு தோட்டா அகற்றப்பட்டுள்ளது. அவனது உடல்நிலை மெதுவாக குணமாகி வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதால், விரைவில் அவன் காவல்துறையினரின் காவலில் வைத்து விசாரிக்கப்படுவான் என நம்பப்டுகிறது
doctors removed bullet from terrorist PannaIsmail body
Doctors at Chennai Rajiv Gandhi hospital after a successful operation removed two bullets from the stomach of the terrorist Panna Ismail