மத்திய பிரதேசம் நவராத்திரி வழிபாட்டு விழா நெரிசலில் சிக்கி 115 பேர் பலி

madhya pradesh temple stampede : 115 killed over 100 injured

115 killed, over 100 injured in Madhya Pradesh temple stampede

மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரதன்கர் கோவிலில் உண்டான கூட்ட நெரிசலில் 115 பக்தர்கள் பலி

மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ரதன்கர் கோவிலில் உண்டான கூட்ட நெரிசல் காரணமாக அதில் சிக்கி 115 பக்தர்கள் பலியானார்கள் அது மட்டும் இன்றி சுமார் 100 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். ரதன்கர் மாதா கோவில் மத்திய பிரதேசத்தில் உள்ள தாதியா எனும் மாவட்டத்தில் இருக்கிறது. நவராத்திரி கடைசி நாளான நேற்று அங்கு சிறப்பு வழிபாடு  நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள பல்லாயிரகணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்தார்கள்.

பாலம் இடிந்து விழுவதாக பரவிய  வதந்தி

வழிபாட்டை காண கோவிலுக்கு செல்ல கோவிலை அடைய அவர்கள் சிந்து நதியை கடக்க அதன் மீதுள்ள பாலத்தில் செல்ல வேண்டும். அந்த சிந்து நதி பாலத்தில் ஒரே சமயத்தில் பல்லாயிரகணக்கான பேர் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த பாலம் இடிந்து விழுவதாக பரவிய  வதந்தியை அடுத்து சென்றுகொண்டிருந்த பக்தர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முந்தியடித்து கொண்டு  ஓடினார்கள். அதில் உண்டான நெரிசலில் சிக்கி 115 பக்தர்கள் பலியானார்கள்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுமார் 25 பேர் தாங்கள் கோவிலுக்கு விரைவாக போக வேண்டி அந்த பாலம் இடிந்து விழப்போகிறது என வதந்தி ஒன்றை பரப்பினர்

மேலும் இந்த கூட நெரிசலில் சுமார் 100 பக்தர்கள் படுகாயம் அடைந்தார்கள். நேற்று அந்த கோவிலுக்கு 4 லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்தார்கள். இது எப்போதும் போல் இல்லாமல் பக்தர்கள் கூட்டம் அதிகமாகும். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுமார் 25 பேர் தாங்கள் கோவிலுக்கு விரைவாக போக வேண்டி, அந்த பாலம் இடிந்து விழப்போகிறது என வதந்தி ஒன்றை பரப்பியதாக காவல்துறை டி.ஐ.ஜி திரு.டி.கே. ஆர்யா கூறிஇருக்கிறார். இந்த நிலையில் இந்த கொடுமையான சம்பவம் குறித்து மேல் விசாரணை மேற்கொள்ள அந்த மாநில முதல்அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இச்சம்பவம் பற்றி அறிந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சிவராஜ் சிங் சவுகானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

madhya pradesh temple stampede : 115 killed over 100 injured

115 killed, over 100 injured in Madhya Pradesh temple stampede

115 people killed and over 100 injured in a stampede at Ratangarh Temple in Madha Pradesh’s Datia district on Sunday.

madhya pradesh temple stampede : 115 killed over 100 injured

Related posts