நைரோபியில் மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டி

A UNIQUE BEAUTY PAGEANT CALLED ‘MISS FABULOUS’

A UNIQUE BEAUTY PAGEANT CALLED 'MISS FABULOUS'

கென்யாவின் தலைநகர் நைரோபியில் வித்தியாசமான அழகிப் போட்டி ஒன்று நடந்துள்ளது. இவ்அழகிப் போட்டியில் பங்கேற்ற பெண்களின் உடல் அழகை கணக்கில் வைத்தோ ஏனைய வனப்பை வைத்தோ பட்டம் கொடுக்க படவில்லை. இதற்கு மாறாக பெண் மாற்றுத் திறனாளிகள் தான் இந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கினார்கள். உலகில் எல்லா இடங்களிலும் தற்பொழுது தடுக்கி விழுந்தால் பெரும்பாலான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவங்கள்   அழகிப் போட்டியை தான் விரும்பி நடத்துகிறார்கள். இதில் அழகிய விதம் விதமான அரைகுறை உடை அணிந்து பெண்கள், உலகதில் எல்லா இடங்களிலும் நடந்தபடிதான் இருக்கிறது. ஆனால் இந்த அழகி  போட்டி வழக்கமான போட்டி போல் இன்றி, வித்தியாசமான ஒரு இனிய அழகிப் போட்டியை கென்யா தலைநகர் நைரோபியில் நடத்தி இருக்கிறார்கள்.

இது பெண் மாற்றுத் திறனாளிகளுக்கான அழகிப் போட்டி. இதில் குள்ளமானவர்கள், சக்கர நாற்காலியில் நடமாடுவோர், நடப்பதற்கு முடியாதவர்கள் என்று பல விதம் விதமான பெண்மணிகள் கலந்து கொண்டார்கள். மிஸ் பேபுலஸ் அழகிப் போட்டி என இதற்குப் பெயர். இந்த போட்டி 4வது ஆண்டாக நைரோபியில் உள்ள 680 ஹோட்டல் என்ற ஹோட்டலில் நடந்தது. இந்த அழகி போட்டியில் மிஸ் பேபுலஸ் ஆப்பிரிக்கா 2013 பட்டத்தை சல்லி மைனா என்ற பெண் தட்டிச் சென்றார். வெற்றி பெற்ற அந்த 21வயதான கென்ய நாட்டு மாடல் அழகி, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்காக உழைக்க போவதாக  கூறினார்.

முதன் முதலில், 2011ம் ஆண்டு தான் இந்த வித்தியாசமான அழகிப் போட்டி நடத்தப்பட்டது. அது கென்யாவில் நடந்தது. அதில் நடந்த மிஸ் கான்பிடன்ஸ் எனும் அழகிப் போட்டியில் ரூத் முயனி என்ற பெண்  பட்டம் வென்றார். இந்த அழகி மிகவும் குள்ளமானவர். இந்தப் அழகி  போட்டிக்குப் பின் அவர் பிரபலமானார். இவரது முயற்சியினால் உருவானதே இந்த மிஸ் பேபுலஸ் அழகிப் போட்டி.  இவர் தான் தன்னைப் போல வித்தியாசமான பெண்களை உற்சாகபடுத்தி ஊக்குவிப்பதற்காக இந்த அழகிப் போட்டியை ஆரம்பித்தார். அதே சமயம், இந்த அழகி போட்டியில் மாற்றுத் திறனாளிகள் மட்டும் இன்றி சாதாரண மாடல் அழகிகளும் கலந்து கொள்ள முடியும். இந்த அழகி போட்டியை மிக பெரிய அளவில் நடத்த வேண்டும் என்பது தான் ரூத் முயனியின் ஒரே குறிக்கோளாகும்.

A UNIQUE BEAUTY PAGEANT CALLED ‘MISS FABULOUS’

A UNIQUE BEAUTY PAGEANT CALLED 'MISS FABULOUS'

Miss Fabulous pageant held in Kenya capital Nairobi is one of a unique kind beauty contest that dismisses all the preconceived notions of a regular beauty pageant. It is a pageant where female models showcase not only their talent or beauty but their disabilities and deformities such as short stature, persons on wheel chairs and even the ones who use aids for walking!

Tamil siragugal: The Tamil News Magazine chennai

Related posts