காஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனை : காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்

காஞ்சிபுரம் பறக்கும் படை தேர்தல் அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் காரில் கொண்டு சென்ற ரூ.39 லட்சம் பறிமுதல்.. காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி கார் ஒன்று சென்றது. அந்த காரை சோதனை செய்தபோது, இந்திய மதிப்பில் ரூ.39 லட்சம் வெளிநாட்டு கரன்சி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, யுஏஇ எக்ஸ்சேஞ்ச் என்ற வெளிநாட்டு பணம் மாற்றம் செய்யும் நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும், காஞ்சிபுரத்தில் உள்ள கிளை அலுவலகத்தில் இருந்து கொண்டு செல்வதாகவும் தெரிந்தது. மேலும் காரில், அந்நிறுவனத்தின் துணை மேலாளர் பாலாஜி என்பவர் உள்பட 3 பேர் இருந்தனர். Kanchipuram flying squad இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  டிஎஸ்பி பாலச்சந்தர் விசாரித்தார். பின்னர், அந்த கரன்சிகளை பறிமுதல் செய்து…

Read More

தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

Madras High Court Madurai Bench

Madras High Court of Madurai Branch today denied bail to 35 crew member தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நவீன ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் கப்பலில் வந்த 35 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பாக ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. English Summary : The Madras…

Read More

சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் மின்வெட்டு : மறுபடியும் முதல்ல இருந்தா ???

Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai சென்னை: சென்னையை தவிர தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் முன் அறிவிப்பு ஏதும் இல்லாமல் மின்வெட்டை தமிழக மின்சார வாரியம் அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பல மாதகாலமாக இருந்து வந்த மின்வெட்டு பிரச்சினை, கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ காற்றின் பயனாக காற்றாலைகளில் தேவையான அளவு மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக மின்வெட்டு பிரச்னை ஓய்ந்தது. எனினும் கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் மின்வெட்டு பிரச்சினை ஆரம்பித்துள்ளது. Electricity scarcity problem started again in all the districts of tamilnadu except chennai தினசரி ஒரு மணி நேரம் என துண்டிக்கபட்டிருந்த மின்சாரம் தற்சமயம் மென்மேலும் உயர்ந்து நகர்ப்புறங்களில் தினசரி 4 மணி நேரம்…

Read More

விஜயகாந்துக்கு அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்

arrest warrant for Vijayakanth திங்கள், 1 ஜூலை 2013: சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் அரசு அவதூறு வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் ஒன்றில் மக்கள் பணத்தை விளம்பரம் மூலம் அரசு விரயம் செய்கிறது என்று பேசியதாக தமிழக அரசு சார்பில் அவர் மீது சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று விஜயகாந்த் மீது தொடரப்பட்ட மற்றொரு அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதற்காக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார். இதனால், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை.  இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் இன்று சென்னை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்த் நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட்…

Read More

ஸ்ரீபெரும்புதூரில் இந்த ஆண்டு விமான நிலையம்:பிரதமர் முடிவு!

Green Field airport Sriperumbudur புதுடில்லி: ஸ்ரீபெரும்புதூர் உட்பட, எட்டு இடங்களில், இந்தாண்டுக்குள் விமான நிலைய பணிகளை துவங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பிரதமர் அலுவலக விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீபெரும்புதூர், பெல்லாரி உட்பட, எட்டு இடங்களில், கிரீன்பீல்டு விமான நிலைய பணிகளுக்கான ஏற்பாடுகளை, இந்தாண்டுக்குள் துவங்கி, முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தனியார் – அரசுத் துறை பங்களிப்புடன், சென்னை விமான நிலையத்தின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஆறு மாதங்களில், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில், அரசு – தனியார் பங்களிப்புடன், 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.…

Read More

மாநிலங்களவை தேர்தல் அதிமுக திமுக வெற்றி

admk dmk won the Rajya Sabha election மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்   தேர்தல் நேற்று(27.6.13) 9மணியளவில் நடந்தது இதில்  அ தி மு க வேட்ப்பாளர்கள் நான்கு பேரும் அதிமுக ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஒருவரும் திமுக வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றனர் தேமுதிக தோல்வியை தழுவியது, வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை சட்டப் பேரவைச் செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏ.எம்.பி.ஜமாலுதீன் வழங்கினார். வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 234 வாக்குகளில் 231 வாக்குகள் பதிவாயின. தேர்தலை பாமக புறக்கணித்ததால் 3 வாக்குகள் பதிவாகவில்லை. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப் பேரவை குழுக் கூட்ட அறையில் வியாழக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கியது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பார்வையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.…

Read More

தமிழகம் முழுவதும் பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றம்.

பள்ளி நேரங்கள் 9.30 என்பது 8.30 ஆகா மாற்றப்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம். ஜூன் 1 தேதி முதல் அமலுக்கு வரும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுள் தெரிவித்தார். மதுரை மாவட்ட பள்ளிகளின் நேரம் வரும் ஜூன் 1 முதல் மாற்றி அமைக்கப் படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார் இதனால் வரை 9.30மணிக்கு துவங்கிய பள்ளி 8.30மணிக்கு துவங்கும் என அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும் விபத்தினை தவிர்க்கவும் மாணவர்களின் நலன் கருதியும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது என அவர் தெரிவித்தார், விரைவில் தமிழகம் முழுவதும் இது நடைமுறை படுத்த படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் கூறினார். School timing change in madurai

Read More

கனிமொழி மாநிலங்களவை வேட்பாளர்?? திமுக அவசர கூட்டம்..

Kanimozhi the Rajyasabha Candidate of DMK 13 ஜூன் 2013 : சென்னை : திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து  முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கருணாநிதியின் மகள் கனிமொழியை மீண்டும் போட்டியிட வைக்க முடிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது.  இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. கூட்டத்திற்குப் பிறகு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக போட்டியிடும் பட்சத்தில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 23 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திராவிட முன்னேற்ற கழகம், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவைப் பெற முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Kanimozhi the Rajyasabha Candidate of DMK

Read More

ரியல் எஸ்டேட் மசோதா. பில்டர் தவறு செய்தால் 3 ஆண்டு சிறை!!

Real estate Regulations in India நாடு முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்து பல ஆயிரம் கோடிரூபாய் புழங்கும் ரியல் எஸ்டேட் துறையில் ஒழுங்குமுறை படுத்த மசோதா ஒன்றை மக்களவையில் நிறைவேற்ற மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முக்கியமாக பொதுமக்களை மோசடிகளில் இருந்து காப்பற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும். இதில் அனைத்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தங்களது கட்டுமான திட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே வீட்டு மனையோ, வீடுகளோ விற்கப்பட முடியும். ஒரு கட்டுமான நிறுவனம் ஒப்புக்கொண்ட காலத்திற்குள் வீட்டை கட்டி தரவில்லை என்றால், அதன் மீது ஆணையம் அபராதம் விதிக்க முடியும். முக்கிய அம்சங்கள் வருமாறு: * ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பில்டர்கள் தவறு செய்தால், அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். *  ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு…

Read More

சேது திட்டத்தை நிறைவேற்ற போராட்டம் : கருணாநிதி

sethusamudram shipping canal project karunanidhi birthday மத்திய, மாநில அரசுகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தங்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., திடலில் கருணாநிதியின் 90-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் (3 ஜூன்  2013) திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதற்காக பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது:-  திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம், சட்டப்பேரவை வளாகம் கட்டப்பட்டன. ஆயிரங்கால் மண்டபத்தை பூதங்கள் கட்டின என்பதுபோல தலைமைச் செயலகத்தை சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் (கருணாநிதி) வரை பார்த்து பார்த்து கட்டினோம். அதை மருத்துவமனையாக அறிவித்து, வேகவேகமாகப் பணிகள் நடைபெற்று, தற்போது பாழடைந்து கிடக்கிறது.…

Read More