298 பேருடன் சென்ற மலேசிய விமானம்  உக்ரைன் வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது

Malaysian Flight carrying 298 People crushes in Ukraine 298 பேருடன் சென்ற மலேசிய விமானம்  உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் அதைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகிய உள்ளன. நேற்றுஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை சண்டையிடும் பகுதிக்கு மேலே வந்தபோது திடீரென வெடித்து சிதறியது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையின் வசமுள்ள ஹிராபோவ் கிராமத்தில் உடல்கள் சிதறியுள்ளதாக தெரிகிறது. மீட்பு பணிகளை நடத்துவதற்காக 3 நாட்கள் போரை நிறுத்துவதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது வெடித்தது இந்த விமானத்தின் ரகம் போயிங் 777,200 இஆர். பல கிலோ மீட்டர் தூரம் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதாகவும், அடையாளம் காணாத அளவுக்கு சிதறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு நடக்கும்…

Read More

தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

Madras High Court Madurai Bench

Madras High Court of Madurai Branch today denied bail to 35 crew member தூத்துக்குடியில் சிக்கிய அமெரிக்க தனியார் கப்பலில் பயணித்த 35 பேரினுடைய ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் 12ம் தேதி தூத்துக்குடி பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் நவீன ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் கப்பலில் வந்த 35 நபர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். அந்த அமெரிக்க கப்பல் மாலுமிகள் சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சார்பாக ஜாமீன் மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. English Summary : The Madras…

Read More