298 பேருடன் சென்ற மலேசிய விமானம்  உக்ரைன் வான் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது

Malaysian Flight carrying 298 People crushes in Ukraine

Malaysian Flight carrying 298 People crushes in Ukraine

298 பேருடன் சென்ற மலேசிய விமானம்  உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் அதைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகிய உள்ளன. நேற்றுஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து கோலாலம்பூர் நோக்கி பறந்துகொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படை சண்டையிடும் பகுதிக்கு மேலே வந்தபோது திடீரென வெடித்து சிதறியது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி படையின் வசமுள்ள ஹிராபோவ் கிராமத்தில் உடல்கள் சிதறியுள்ளதாக தெரிகிறது. மீட்பு பணிகளை நடத்துவதற்காக 3 நாட்கள் போரை நிறுத்துவதாக கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது வெடித்தது

இந்த விமானத்தின் ரகம் போயிங் 777,200 இஆர். பல கிலோ மீட்டர் தூரம் விமானத்தின் பாகங்கள் சிதறி கிடப்பதாகவும், அடையாளம் காணாத அளவுக்கு சிதறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு நடக்கும் கடும் சண்டையால், வெள்ளை கொடிகளுடந்தான் உடல்களை மீட்டு வர வேண்டியுள்ளது. ஆன்டன் கெராஷென்கோ,உக்ரைன் உள்துறை அமைச்சரின் செயலாளர் பின்வருமாறு கூறினார், “33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், பக் லாஞ்சர் ஏவுகணை மூலம் சிதறடிக்கப்பட்டதால் விமான பாகங்களும், பயணிகளின் உடல்களும் வெடித்து சிதறி தூள் தூளாகியுள்ளன. நிபுணர்களின் புலனாய்வு அறிக்கை வெளியிட்டப்பின்னரே, இதுபற்றிய உண்மையான நிலை தெரிய வரும்”. கோலாலம்பூர் மற்றும் ஆம்ஸ்டெர்டாம் விமான நிலையங்களில் பயணிகளின் உறவினர்கள் குவிந்தவன்னம் உள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்பு, பீஜிங் நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமான நிலையில் மீண்டும் மலேசியன் ஏர்லைன்ஸ் தாக்குதலால் மலேசிய அரசு அதிர்ச்சியாகியுள்ளது.

விமானங்கள்உக்ரைன் வான்வெளியில்பறக்க தடை

இச்சம்பவத்திற்க்கு பின்னர் சர்வதேச விமானங்கள் உக்ரைன் வான்வெளியில் பறக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு இவ்வழி எளிதானதாகவுள்ளதால், இவ்வழியை பயன்படுத்தினர். ஆனால், தற்போது உக்ரைன் விவகாரம் தீவிரத்தால் அமெரிக்க விமானங்களுக்கும்இந்திய விமானங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகள், இந்திய விமானங்களை மாற்று பாதையில் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

Malaysian Flight carrying 298 People crushes in Ukraine

Malaysian Flight carrying 298 People crushes when it flies on the Ukraine airspace. Many news were released relating to the Malaysian Flight. The flight flying from the Amsterdam city to Kuala Lumpur yesterday was exploded suddenly when it flies across Russian-backed rebel forces fighting area. Russian-backed rebel forces announced the stopping of fight for 3 days to carry out recovery tasks.

The flight was Boeing 777,200 ER type. Officers has announced that aircraft parts and the passengers bodies were scattered to many kilometer distances and the recovery team has to go by holding white flag to recover them. Anton Geraschenko, Ukraine minister’s Secretary says that, “The Malaysian flight was shot by the missile aimed through the Buck Lancer, so it was shattered into pieces around 33 thousand feet height. Clear information can be known only after the release of investigation report”

Passenger’s family members were surrounded in the airport for knowing the information. Malaysian airlines department was shocked due to another flight crashes within 4 months duration of the missing flight. After this incident International flights were warned not to fly in that way. Indian officials are also announced that Indian flights were instructed to take different ways.

ADVERTISEMENT: For plots / lands near Sriperumbudur and its surrounding, CLICK HERE

Related posts