porur junction bridge not yet Completed பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகள்: பலமுறை முதல்வர் இந்த சாலையை கடந்தும் விடிவுகாலம் வரவில்லை போரூர் மேம்பாலத்திற்கு பூந்தமல்லி செல்லும் வழியில் இரண்டு தூண்களோடு முடிந்து விட்டது போரூர் மேம்பால பணிகள். பாதியிலேயே விடப்பட்ட போரூர் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மக்களும் சாலையை கடக்க உயிரையும் பணயம் வைக்கும் நிலையும் அடிக்கடி நிகழ்கிறது. காவல் துறையும் தங்களின் பணிகளை முடிந்தவரை சிறப்பாக செய்தாலும் நாளுக்குநாள் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை. இன்னும் சில தினங்களில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிடும் நிலையில் தண்ணீரும் தேங்கினால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டு மக்கள் மேலும் துயரத்துக்கு உள்ளாவோம் என அப்பகுதி மக்கள் வேதனைப் படுகின்றனர். போரூரில் 4 சாலைகள் சந்திக்கும் சிக்னலில் இருந்து மேற்கே போகும்…
Read MoreTag: Chennai
தமிழகத்தில் மேலும் 9 அம்மா உணவகங்கள் திறப்பு : மக்கள் வரவேற்ப்பு
new amma restaurant : சென்னையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். வார்டுக்கு ஒரு உணவகம் வீதம் 200 வார்டுகளிலும் 200 உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1க்கும் மதியம் சாம்பார் சாதம் ரூ.5க்கும், தயிர்சாதம் ரூ.3க்கும் விற்கப்படுகிறது. மிக குறைந்த விலையில் உணவு கிடைப்பதால் இந்த உணவகங்களுக்கு பொது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. காலையில் 5 ரூபாயிலும், மதியம் 8 ரூபாயிலும் 2 வேலை வயிறார சாப்பிடுவதால் சாதாரண மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான உணவகங்களில் சாப்பிடுவதற்கு நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். அலுவலகம் செல்வோர்கூட அம்மா உணவகங்களில் விரும்பி சாப்பிடுகிறார்கள். மே 30-ந்தேதி வரை 2 கோடியே 14 லட்சம் இட்லி விற்பனையாகி உள்ளது. பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து திருச்சி,…
Read Moreசென்னை மணலியில் பயங்கர தாக்குதல்: பெண் ரவுடி கை வருசை
Manali gang attack in chennai சென்னையை அடுத்த மணலியில் பெரியார் நகர் என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பே C-Tex நிரவனத்தில் கட்டிட பணி புரிந்த மற்றும் வீடு இல்லாதவர்களுக்காக மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது எம்.ஜி.ஆர் மற்றும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசியல் தலைவர்களால் இலவசமாக கொடுக்கபட்டது. அந்த இடத்தில் தண்டயார் பேட்டையை சேர்ந்த கும்பல் ஒன்று அந்த இடத்தில் குடிசை வீடு ஒன்று கட்டிக்கொண்டு சில மாதங்களாக வசித்து வருகிறது. அந்த கும்பலுக்கு கோமளவல்லி என்ற பெண் ஒருவர் தலைவியாக செயல்படுகிறார் நேற்று இரவு இந்த கும்பலை சேர்த்த கோமளவல்லியின் சகோதரர் செந்தில் மற்றும் அவரது உறவினர்கள் பெரியசாமி, பழனிசாமி ஜானகி, மற்றும் கோமளவல்லியின் தாயார் மற்றும் மாமியார் ஆகியோர் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜா…
Read Moreதென் தமிழ்நாட்டில் ஒன்பது புதிய தொழில் பூங்காக்கள் : முதல்வர் அறிவிப்பு
New Industrial parks planned in southern districts of Tamil nadu: SIPCOT complex சென்னை 8 மே 2013: தென் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும், இது சுமார் 18,650 ஏக்கரில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார். நேற்று, சட்டசபையில் 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பில் : சிவகங்கை – மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் கூடுதலாக 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், கிராபைட் மற்றும் பிற தொழிற்சாலைகள் அமைக்க வசதியாக புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும். ராமநாதபுரம்: ரசாயனம், பெட்ரோலிய சுத்திகரிப்பு, உரம் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும். புதுக்கோட்டை: உலோகத் தொழிற்சாலைகள், பொறியியல், மற்றும் உலர் தோல் போன்ற தொழில்களுக்கு தொழில் பூங்கா 2,000 ஏக்கரில் உருவாக்கப்படும். திண்டுக்கல்: பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில் பூங்கா,…
Read Moreசென்னை அடையாறு புற்றுநோய் மையத்துக்கு சாஸ்த்ரா பல்கலை. ரூ. 54 லட்சம் நன்கொடை
chennai adyar cancer institute சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ரூ. 54 லட்சத்தை நன்கொடையாக செவ்வாய்க்கிழமை வழங்கியது. சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்னை அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி. சாந்தாவிடம் ரூ. 54 லட்சத்துக்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார். இதுகுறித்து சேதுராமன் தெரிவித்தது: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உள்ள அதிநுண்-நுட்பவியல் மற்றும் உயிரியல் பொருள்சார் உயராய்வு சேர்ந்த மையமும், அடையாறு புற்றுநோய் சிகிச்சை கழகமும், புற்றுநோய் மற்றும் மூளைக்கட்டி பற்றி ஆய்வு நிகழ்த்துவதில் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளன. இரு நிலையங்களும் கைகோர்த்து இது பற்றித் தொடர்நிலை ஆய்வு மேற்கொள்ள இது நல்ல தொடக்கம். புற்றுநோய் தொடர்பான பல அரிய செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், அது பற்றிய கல்வியறிவைப் பெறவும், தொண்டு செய்வதற்கும் இது வழிவகுக்கும்…
Read More