New Industrial parks planned in southern districts of Tamil nadu: SIPCOT complex
சென்னை 8 மே 2013: தென் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒன்பது தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும், இது சுமார் 18,650 ஏக்கரில் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
நேற்று, சட்டசபையில் 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பில் :
சிவகங்கை – மானாமதுரை சிப்காட் தொழில் வளாகத்தில் கூடுதலாக 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், கிராபைட் மற்றும் பிற தொழிற்சாலைகள் அமைக்க வசதியாக புதிய தொழில் பூங்கா அமைக்கப்படும்.
ராமநாதபுரம்: ரசாயனம், பெட்ரோலிய சுத்திகரிப்பு, உரம் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக சுமார் 2,000 ஏக்கர் பரப்பில் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
புதுக்கோட்டை: உலோகத் தொழிற்சாலைகள், பொறியியல், மற்றும் உலர் தோல் போன்ற தொழில்களுக்கு தொழில் பூங்கா 2,000 ஏக்கரில் உருவாக்கப்படும்.
திண்டுக்கல்: பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் சார்ந்த தொழில் பூங்கா, 1,500 ஏக்கரில் அமைக்கப்படும்.
தேனி: 2,000 ஏக்கரில், உணவுப் பதப்படுத்துதல் சார்ந்த தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும்.
விருதுநகர்: தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதுடன் உணவுப் பதப்படுத்துதல், பொறியியல் மற்றும் அச்சுத் தொழிற் கூடங்கள் கொண்ட தொழில் பூங்கா சுமார் 3,400 ஏக்கரில் உருவாக்கப்படும்.
தூத்துக்குடி: கப்பல் கட்டுதல், கடல்சார் தொழில்கள் மற்றும் பழுது நீக்கும் தொழிற்சாலைகள், ரசாயன தொழில்கள், கனரக பொறியியல் உலோகத் தொழில், ஆகியவற்றிக்கான கட்டமைப்புடன் 6,000 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா ஏற்படுத்தப்படும்.
நெல்லை: சூரிய ஒளி சேகரிப்பான்கள், ஒளி மின் தகடுகள் மற்றும் இதர புதுப்பிக்கத் தக்க எரிசக்தி தொடர்பான கருவிகள், இயந்திரங்கள், வீட்டு உபயோக சாதனங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழில் பூங்கா, 1,500 ஏக்கரில் உருவாக்கப்படும்.
கன்னியாகுமரி: கடல்சார் தொழிற்சாலைகளை ஈர்க்கும் வகையில் 250 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்படும். இவற் றோடு ரப்பர் தொழில்கள், பொறியியல் சார்ந்த தொழில்கள் மற்றும் சுற்றுலாத் தொழில்களும் ஊக்கவிக்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
கூட்டு முயற்சி: தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவன அமைப்புகள் கூட்டு முயற்சியை உருவாக்கும் வகையில், தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க முன் வந்தால் சிட்கோ நிறுவனம் அவற்றுடன் இணைந்து 10 சதவீதம் வரை மூலதனத்தைச் அளித்து புதிய தொழிற்பூங்காக்கள் உருவாக்கும்
இதர சலுகைகள்: 50 சதவீத மானியத்துடன் தென் மாவட்டதொழில் பூங்காக்களில் நிலம் ஒதுக்கப்படும். மானியத் தொகை அரசால் நேரடியாக அளிக்கப்படும். நில பத்திர பதிவுக்கான முத்திரைத் தாள் கட்டணத்துக்கு, முழு விலக்கு அளிக்கப்படும். மூலதன மானியம் 1.5 மடங்கிலிருந்து இரு மடங்காக அதிகரிக்கப்படும். தொழிற்பூங்கக்கள் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படும். தற்சமயம் மதிப்பு கூட்டு வரிச் சலுகை பெற 50 கோடி ரூபாயாக உள்ளது. அது குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை 10 கோடி ரூபாயாக குறைக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, 20 சதவீத இடம் ஒதுக்கப்படும் எனவும் முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
New Industrial parks planned in southern districts of Tamil nadu:
SIPCOT complex
SIPCOT complex: New Industrial parks planned in southern districts of Tamil nadu: Sivaganga, Ramanathapuram, Pudukottai, Theni, Dindigul and Tirunelveli, Virudhunagar, Thoothukudi, Kanyakumari, Manamadurai, and Sivaganga district
Advertisements:
Contact the best Real estate company to Buy and sell Properties in Chennai