இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நடைபெற்ற கர்னல் பென்னிகுயிக் நினைவு மண்டபம் விழாவின் போது, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு, இன்றளவும் மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கும் பழமையான அணைகளில் ஒன்றான கல்லணையை உருவாக்கிக் கொடுத்த கரிகால் சோழனின் சேவையைப் போற்றி கௌரவிக்கும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன் படி, ரூ.2.10 கோடியில் 4000 சதுர அடிப் பரப்பில் 32 அடி உயரம் கொண்ட அரங்கம், அதனைச் சுற்றி நான்கு புறங்களிலும் 28 அடி உயரத்தில் தூண்களுடன் கூடிய நான்கு முகப்பு மண்டபங்கள் மற்றும் 20 அடி உயரம் கொண்ட நான்கு நுழைவு வாயில்கள் மற்றும் கட்டப்பட்டவுள்ள கரிகால் சோழனின் மணிமண்டபத்துக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே விடியோ கான்பரன்சிங் முறை மூலம் அடிக்கல் நாட்டினார்.
karikala cholan
Please Contact best Square feet to Buy Property in Chennai