Newly-wed couple killed in public over love marriage in Pakistan பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை அந்தப் பெண்ணின் தந்தை உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் அவர்களின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதுடைய முவாபியா பீபி. அவர் பக்கத்து கிராமமான ஹசனாபாத்தைச் சேர்ந்த 27 வயதுடைய சாஜத் அகமத் என்பவரை காதலித்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் முவாபியா கடந்த 18ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நீதிமன்றத்தில் சாஜதை திருமணம் செய்து கொண்டார். முவாபியா திருமணம் முடிந்து ஹசனாபாத்தில் இருப்பது அவரது குடும்பத்தாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து முவாபியாவின் தந்தை தில்ஷாத் உள்பட 7 பேர் ஹசனாபாத் சென்றனர். அங்கு அவர்கள்…
Read Moreஇந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Australian Research center has warned drought risk in India இந்தியாவில் கடும் வறட்சி ஏற்பட வாய்ப்புல்லதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த ஆண்டு எல்-நினோ என்று அழைக்கப்படும் வெப்ப நீரோட்டத்தின் காரணமாக இந்தியாவில்பருவமழை குறைந்து, கடும் வறட்சி ஏற்படும் அபாயமுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தியவின்வானிலை மாற்றங்களை பசிபிக் கடலின் மேற்பரப்பின்வெப்பம் தான் தீர்மானிக்கிறது. இவ்வெப்ப நிலை சீராக இருந்தால்தான், இந்தியாவின் வானிலை நன்றாகஇருக்கும். இல்லையென்றால் கடும் வறட்சி, அல்லது அதிக மழை பொழிவு உண்டாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பருவநிலை,மேற்கு பசிபிக் கடலோரபகுதியின்வெப்ப நிலைமற்றும் கடல் அழுத்தத்தையும்கணக்கிட்டு தான் கணிக்கப்படுகிறது. தள்ளிப்போகியுள்ள பருவமழை: இந்த ஆண்டு புவி வெப்பம் அதிகரித்துள்ளதால், எல்-நினோ எனப்படும் வெப்ப நீரோட்டத்தின் வெப்ப அளவு வழக்கத்திற்கு மாறாக வெப்பமாக உள்ளது. இந்தியாவில்,இந்த ஆண்டிற்க்கான…
Read Moreசென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரெளடி வெட்டிக் கொலை
Rowdy dies after attack in GRH சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரௌடி பொக்கை ரவி திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி என்ற பொக்கை ரவி (35). இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில், நரம்பு தளர்ச்சி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த ரவி, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மூட நீக்கியல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரவி திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சாந்தகுமார், தமிழச்செல்வன் ஆகியோருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல், திடீரென பொக்கை ரவியை அரிவாளால்…
Read Moreமதுரை மக்கள் குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்பனையாவதால் விரக்தியில் உள்ளனர்
People in Madurai Suffers due to Selling of Drinking water for Rs.13 மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில், குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்பனையாவதால் மக்கள் விரக்தியில் உள்ளனர். கோமதிபுரம், மேலமடை, சதாசிவம் நகர், தாசில்தார்நகர் உட்பட்டப் பகுதியில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிகள் மேலமடை ஊராட்சிக்கு உட்பட்டதாக இருந்தபோது 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சியாக மாறிய பின்னர் எந்த வசதியும் இல்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுயுள்ளனர். திரு. ராமசுப்பு, கோமதிபுரம் தென்றல் நகரின் குடியிருப்போர் சங்க தலைவர் கூறியதாவது: இங்கு குடிநீர் பிரச்சனை விஸ்வரூபமாக உள்ளது. வண்டியூர் கண்மாயில் அமைக்கப்பட்ட ஆழ்குழாயிலிருந்து தண்ணீரை லாரி லாரியாக எடுத்தாலும், எங்களுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் எங்கள்…
Read Moreமுகலிவாக்கம் பெற்றோர்கள் அரசு உயர்நிலை பள்ளியின் தரம் உயர்த்திட பெற்றோர் குற்றம் சாட்டு
Parents have complained to upgrade Mugalivakkam Government School Standard to Higher Secondary School முகலிவாக்கத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தநடவடிக்கை எடுக்கவில்லை என்றுகல்வி அதிகாரிகளின் மீது, மாணவ, மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டு. ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட முகலிவாக்கம், அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இதில்325 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.மாணவ, மாணவிகள் முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனந்தபுரம், குன்றத்துார் ஆகிய பகுதியில் இருந்து இங்கு படிக்க வருகின்றனர். நடவடிக்கை இல்லை : இங்கு 10ம் வகுப்பு முடிக்கும்மாணவர்கள், பிளஸ் 1 படிக்க, முகலிவாக்கத்திலிருந்து, போரூர், பரங்கிமலை, பாய்கடை ஆகிய பகுதிகளிலுள்ளஅரசு மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று படிக்கவேண்டியுள்ளது. இவை முகலிவாக்கத்திலிருந்து 3ல் இருந்து 5 கிலோ மீட்டர் தூரமாகும். அதலால் இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக…
Read Moreபீகார் மாநிலத்தில் மகளின் காதலனை கண்களைத் தோண்டி கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த தந்தை
Police constable blinds and kills daughter’s lover மகளை ரகசியமாக சந்திக்க வந்த அவரது காதலரை போலீஸ் தந்தை ஒருவர் தனது இரு மகன்களுடன் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் குமாரும், பாட்னா மாவட்டம் தவ்லத்பூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் அபய்குமார் என்பவரின் மகளும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் ராகுலுக்கு வேலை கிடைத்தது. இதனால், பணிக்காக ஹரித்துவார் செல்வதற்கு முன்னதாக காதலர்கள் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி, காதலி வீட்டில் அனைவரும் தூங்கியதும் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நள்ளிரவில் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளார் ராகுல். காதலர்கள் இருவரும் தனிமையில் இருப்பதை காதலியின் தந்தையான அபய்குமார் பார்த்து விட்டார்.…
Read Moreசென்னை போரூர் அருகே 11 மாடிக் கட்டிடம் இடிந்து பயங்கர விபத்து
Chennai Building Collapse: One Dead, 50 Feared Trapped சென்னையில் பெய்த திடீர் மழையில், போரூர் மவுலிவாக்கத்தில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த 11 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்துள்ளனர். சென்னையில் இன்று மதியம் , திடீர் மழை பெய்தது. இதில் பல பகுதிகளில் மின்சார துண்டிப்பு, போக்குவரத்து பாதிப்பு என சில மணி நேரத்தில் சென்னை அல்லோகலப்பட்டது. இடிந்த விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்கள் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், குறிப்பாக அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இடிந்து விழுந்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை, மீட்க கட்டட இடிபாடுகளில் உள்ள கம்பிகள் இடையூறாக கூறப்படுகிறது. இதனால் கம்பிகளை அகற்ற மீட்பு படையினர்…
Read Moreடெல்லியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து 4பேர் உயிரிழப்பு
Building collapses in North Delhi டெல்லியில் 3 அடுக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆனது. இதுவரை 12 பேர் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடக்கு டெல்லியில் 3 அடுக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாயினர். மேலும், இதில் பலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படும் நிலையில், 12 பேர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் உள்ள இன்டர்லோக் பகுதியில் இன்று காலை 9 மணியளவில், மூன்று அடுக்குக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சபடுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரை மீட்க தீ அணைப்பு வீரர்களும் மீட்பு குழுவினரும் விரைந்து வந்தனர். தவிர 4 ஜே.சி.பி.க்கள் இடுபாடுகளை மீட்கும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம்…
Read More8 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி ஜெயித்து சதனை
Star runner, 8 months pregnant, competes in 800 meters at U.S. championships கர்ப்பமாக இருந்த போதிலும் தளராமல் களத்தில் ஓடி 800 மீட்டர் ஓட்டப் போட்டியில்சாதனை புரிந்துள்ளார் அமெரிக்க வீராங்கனை அல்சியா மோன்டானோ. பின்னாளில் தன்னுடைய குழந்தைக்கு சொல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை பாடத்தை இதன் மூலம் நடத்திக் காட்டியுள்ளார் அவர். இந்த அற்புதமான தருணத்தின் மூலம் தன்னுடைய குழந்தைக்கு தன்னம்பிக்கையின் அற்புதத்தையும் காட்டியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 34 வார கர்ப்ப வயிற்றுடன் கலந்து கொண்டார் அல்சியா. 5 முறை உலக சாம்பியனான இவர் தன்னுடைய ஓட்டத்தை 2 நிமிடங்கள் 32.13நொடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளார். ஏற்கனவே கடந்த 2010 ஆம் ஆண்டில் மொனாக்கோவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் 1:57:34மணிக்கூறுகளில் கடந்த இவர், இந்தமுறை தன்னுடைய முந்தைய சாதனையில் 35 நிமிடங்கள் தாமதமாக…
Read Moreஜம்மு காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் இந்திய நிலைகளை இலக்கு வைத்து இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் இன்று அதிகாலை 12.35 மணியளவில் பீம்பெர்-காலி- காம்பீர் முன்னரங்க நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து இந்திய படைகளும் பதில் தாக்குதலை நடத்தின. இருதரப்பினரிடையேயான துப்பாக்கிச் சண்டை சுமார் 1 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதலில் வீரர்களுக்கு படுகாயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை. முன்னதாக கடந்த 17,18-ந் தேதிகளிலும் சம்பா பகுதியில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More

