முகலிவாக்கம் பெற்றோர்கள் அரசு உயர்நிலை பள்ளியின் தரம் உயர்த்திட பெற்றோர் குற்றம் சாட்டு

Parents have complained to upgrade Mugalivakkam Government School Standard to Higher Secondary School

Parents have complained to upgrade Mugalivakkam Government School Standard to Higher Secondary School
Parents have complained to upgrade Mugalivakkam Government School Standard to Higher Secondary School

முகலிவாக்கத்திலுள்ள அரசு உயர்நிலை பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தநடவடிக்கை எடுக்கவில்லை என்றுகல்வி அதிகாரிகளின் மீது, மாணவ, மாணவியரின் பெற்றோர் குற்றம் சாட்டு.

ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட முகலிவாக்கம், அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது. இதில்325 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.மாணவ, மாணவிகள் முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனந்தபுரம், குன்றத்துார் ஆகிய பகுதியில் இருந்து இங்கு படிக்க வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை :

இங்கு 10ம் வகுப்பு முடிக்கும்மாணவர்கள், பிளஸ் 1 படிக்க, முகலிவாக்கத்திலிருந்து, போரூர், பரங்கிமலை, பாய்கடை ஆகிய பகுதிகளிலுள்ளஅரசு மேல்நிலை பள்ளிகளுக்கு சென்று படிக்கவேண்டியுள்ளது. இவை முகலிவாக்கத்திலிருந்து 3ல் இருந்து 5 கிலோ மீட்டர் தூரமாகும். அதலால் இப்பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டுமென்றுபல ஆண்டுகளாக முகலிவாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கையிடுகின்றனர். இந்நிலையில், 12 வகுப்பறைகள்,ஒரு பரிசோதனை கூடம் கொண்ட மூன்றடுக்கு புதிய கட்டிடம், ஒரு கோடி ரூபாய் செலவில் கடந்த ஆண்டு திறந்தனர். ஆகவே, மேல்நிலை பள்ளிக்குரிய அனைத்து வசதிகளும் உள்ள இப்பள்ளியை தரம் உயர்த்த, பள்ளி கல்வித்துறை நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பெற்றோர்கள்குற்றம் சாட்டி உள்ளனர்.

அச்சத்தில் பெற்றோர் :

முகலிவாக்கம், மணப்பாக்கம், மகனதபுரம் ஆகிய இடங்களிலிருந்து வரும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் கூறியதாவது: முகலிவாக்கம் அரசு பள்ளியை மேல்நிலை பள்ளியாக்க வேண்டும் என்று, 10 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கிறோம். முகலிவாக்கம் பள்ளியே 5 கி.மீ., துாரம் உள்ளது, தற்போதுபிளஸ் 1 செல்ல மேலும், 5 கி.மீ., துாரம் அனுப்பவேண்டும். அவ்வளவு துாரம் அனுப்பினால்பள்ளியில் இருந்து வீடு திரும்ப இரவு ஆகிவிடுவதால், பெண் பிள்ளைகளை அனுப்ப அச்சமாக உள்ளது. உயர் அதிகாரிகள் இப்பிரச்சனையில் விரைந்து கவனம் செலுத்தி, இப்பள்ளியை மேல்நிலைக்கு தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதைப்பற்றி, காஞ்சிபுரம் மாவட்ட கல்விதுறை அதிகாரி ஒருவர் ‘முகலிவாக்கம் அரசு பள்ளியை மேல்நிலை பள்ளியாக்க கோரிக்கை வந்ததுள்ளது, இதைப்பற்றிஉயர் அதிகாரிகள்கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளோம்’ என்று கூறினார்.

 

Parents of the Students studying in Mugalivakkam Government School has complained that the Education Department has not taking any steps to change the standard of the school to Higher Secondary school when there is availability of proper facilities. Mugalivakkam Government School is located in the one and half acre land with newly constructed building comprising of 12 classes and 1 laboratory. Even when there is a full facility, it is still operating as a High School. The Students who studied upto 10th Standard in this school are required to travel 3 to 5 kms for studying 11th Standard, which people find it’s difficult as the students are reaching home during night time. When enquired about a person in the Kanchipuram Educational Department, they said that “A complaint was received regarding the improvement of the standard of Mugalivakkam School, we transferred the same to the higher official notice”.

For Land/Plot sale near Sriperumbudur, contact 9952984848.

Related posts