LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையை இறுதி செய்யும் பணியில் உள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. LGBTQIA+ சமூகத்தின் நலனுக்கான கொள்கைகளை தெரிவிக்க இதுவரை எந்த மாநிலமும் முன்வராத நிலையில், இந்தக் கொள்கைகளை நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் வெளியிடப்படவுள்ளது. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் திருநங்கைகளின் நலனுக்கான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஒரு மாநிலம் LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையைக் கொண்டுவருவது இதுவே முதல் முறையாகும்.
இது தொடர்பான நிலை அறிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வு, சமூகத்துடன் தொடர்புடைய களங்கத்தை அகற்றி, சமூக உறுப்பினர்களின் நலனை உறுதி செய்யும் முயற்சியில், தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை நிறைவேற்றி வருகிறது.
தமிழ்நாடு வரைவு விதிகளாக , திருநங்கைகளின் (உரிமைகள் பாதுகாப்பு) விதிகளை, 2022 – ல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, சட்டத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ் சிலம்பனன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த விதிகள் பின்னர் அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்றார்.
LGBTQIA+ சமூகத்திற்கான வரைவுக் கொள்கையை மாநிலத் திட்டக் கமிஷன் முதலமைச்சரிடம் சமர்ப்பித்து இருப்பதாகவும், அது மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் சமர்ப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக தொடர்ந்து கண்காணித்த சமூக நல இயக்குனர் பங்குதாரர்களுடன் கூட்டங்களை கூட்டி வந்ததாகவும் இந்த மாநிலம் பயிற்சியை 3 மாதத்தில் முடித்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
திருநங்கைகள் மற்றும் LGBTQIA+ சமூகம் பெருமளவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தமிழக அரசு நேர்மையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்த நீதிமன்றம், அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவிப்பதாக நீதிபதி கூறினார். 2019 ஆம் ஆண்டு மத்திய சட்டம் பிரிவு 22(1) இன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை இந்த மாத இறுதியில் நடைமுறைக்கு கொண்டு வருவது மாநில அரசால் எடுக்கப்பட்ட, மேலும் ஒரு நல்ல பயனுள்ள நடவடிக்கையாகும் என்றார்.
இதனால் LGBTQIA+ சமூகத்திற்கான கொள்கையை இறுதி செய்ய அரசுக்கு 3 மாத கால அவகாசம் வழங்குவதாக நீதிமன்றம் கூறியது.
பள்ளிகளில் விழிப்புணர்வு,
பள்ளிக் கல்வி ஆணையர், திருநங்கைகள் மற்றும் ஒட்டுமொத்த LGBTQIA+ சமூகம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இது பள்ளி பாடத்திட்டத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
LGBTQIA+ சமூகத்தைச் சேர்ந்த நபர்களின் தனித்தன்மைகள் மற்றும் அவர்களின் பாலினத்தை குறிப்பிட ஒரு லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது என்று AAG தனது அறிக்கையில் சமர்ப்பித்தது.
பள்ளிக் கல்வி ஆணையரால் எடுக்கப்பட்ட இந்த பயனுள்ள நடவடிக்கைகளை, நீதிமன்றம் வெகுவாக பாராட்டுவதாகத் தெரிவித்தார். மேலும் பள்ளிக் கல்வி ஆணையர் இந்த பயிற்சியை ஒரு முறை நடத்துவதோடு விட்டு விடாமல், தொடர்ந்து நடத்த வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக நீதிபதி கூறினார்.
இதையும் படியுங்கள்
- கொய்னா அணை திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக கெய்ரான் நிலத்தை பயன்படுத்த முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்
- டெல்லி அரசுப் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் நேரடி ஒளிபரப்பை நிறுத்த மறுப்பு : டெல்லி உயர்நீதிமன்றம்
- ‘கற்பழிப்புச் சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்களின் உரிமை மீறல்’ : கற்பழிப்பு வழக்குகளில் இரு விரலால் பரிசோதனை செய்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் – சிக்கிம் உயர் நீதிமன்றம்
- விதி 110 அறிவிப்பு அரசாணையாக மாறுவது எப்படி? சட்டப்பேரவை அறிவிப்புகளும் திட்டச் செயல்பாடும்
- உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழ்: சட்டப்பேரவைத் தீர்மானமும் அரசமைப்புப் பிரிவு 348(2) சொல்வதும்
- குழந்தை பாதிக்கப்பட்ட வழக்கு: காணொளிகளை நீக்க முடியாவிட்டால் 17 இணையதளங்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- ‘வெற்றிப் பயணம்’ மகளிர் இலவசப் பேருந்துத் திட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை
← முந்தைய செய்தி: ‘கற்பழிப்புச் சம்பவங்களில் உயிர் பிழைத்தவர்களின் உரிமை மீறல்’ : கற்பழிப்பு வழக்குகளில் இரு விரலால் பரிசோதனை செய்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல் – சிக்கிம் உயர் நீதிமன்றம்
அடுத்த செய்தி →: கொய்னா அணை திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக கெய்ரான் நிலத்தை பயன்படுத்த முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

