மதுரை மக்கள் குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்பனையாவதால் விரக்தியில் உள்ளனர்

People in Madurai Suffers due to Selling of Drinking water for Rs.13

People in Madurai Suffers due to Selling of Drinking water for Rs.13
People in Madurai Suffers due to Selling of Drinking water for Rs.13

மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில், குடிநீர் ஒரு குடம் ரூ.13க்கு விற்பனையாவதால் மக்கள் விரக்தியில் உள்ளனர்.

கோமதிபுரம், மேலமடை, சதாசிவம் நகர், தாசில்தார்நகர் உட்பட்டப் பகுதியில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதிகள் மேலமடை ஊராட்சிக்கு உட்பட்டதாக இருந்தபோது 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சியாக மாறிய பின்னர் எந்த வசதியும் இல்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறுயுள்ளனர்.

திரு. ராமசுப்பு, கோமதிபுரம் தென்றல் நகரின் குடியிருப்போர் சங்க தலைவர் கூறியதாவது:

இங்கு குடிநீர் பிரச்சனை விஸ்வரூபமாக உள்ளது. வண்டியூர் கண்மாயில் அமைக்கப்பட்ட ஆழ்குழாயிலிருந்து தண்ணீரை லாரி லாரியாக எடுத்தாலும், எங்களுக்கு ஒரு சொட்டு நீர்கூட கிடைப்பதில்லை.

சில மாதங்களுக்கு முன் எங்கள் குடியிருப்பு மக்கள் நிலத்தடி நீர் அளவை உயர்த்துவதற்காக வண்டியூர் கண்மாயை துார்வார ஆரம்பித்தனர். அதை கலெக்டர் அவர்களே துவக்கி வைத்தார். ஆனால், இப்பகுதி கவுன்சிலர் ஜெயகுமார் அது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது என்று, முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் செலுத்தியுள்ளார்.

அதில் இருந்தே இப்பகுதிகளுக்கு மாநகராட்சி குடிநீர் என்பது கனவாக மாறியது. இதைப்பற்றி மேயர், கமிஷனரிடம் புகார் தெரிவித்தால் அன்று மட்டும் தண்ணீர் வருகிறது. வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தினால் இப்பகுதிகளின் நிலத்தடி நீர் உயரும். இதில் அரசு ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

இதைப்பற்றி சம்பந்தப்பட்ட கவுன்சிலர் திரு. ஜெயக்குமார் கூறியதாவது:

இப்பகுதிகளுக்கு, குடிநீர் சப்ளை செய்யது கொண்டிருந்த 18 மோட்டார்களில் 4 மட்டுமே தற்ப்போது செயல்பாட்டிலுள்ளது. மற்றவைகள் பல நாட்களாக பழுதாகியுள்ளன.

தற்ப்பொது நிலத்தடி நீரும் பிரச்னையில் உள்ளது. மற்றும் வார்டின் பொறியாளரும் அடிக்கடி விடுமுறையிடுகிறார். இதைப்பற்றி நகர் பொறியாளரிடமும், எம்.பி.,யிடமும் தெரிவித்துள்ளேன். தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் கண்மாயை துார்வாரியதால் தான் அங்கு வசிக்கும் மக்களுக்கு தண்ணீர் விடவில்லை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றவை. துார்வாருகிரேன் என்று வசூல் செய்ததால் தான் நான் எதிர்த்தேன், என்றார்.

People in Madurai Suffers due to Selling of Drinking water for Rs.13

People suffering due to the sale of drinking water as 13 rupees in Madurai. There are more than 800 houses are there in Gomathipuram, Melamadai, Sadasivam Nagar. When they are within the Melamadai Municipality, 2 drinking water tanks are provided for water supply. But after it becomes Corporation no facilities were provided. Mr. Ramasubbu, People’s Committee head of Gomathipuram Thendral Nagar says that “There is no enough water for people living in these areas, but it increased after Councilor Mr.Jeyakumar has complained to Chief Minster Office regarding people self tried in increasing the depth of the well.” But Mr. Jeyakumar said that “Due to the repair of Water Lorries in these areas only increased the drinking water drought. He already complained to higher officials, so actions will be done sooner. He also said that people complaint about him wrong as he only opposed people who collecting donation in the name of well repairing.

Advertisement: For Approved plots sale in Sunguvarchatram, contact 9952984848

Related posts