சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரெளடி வெட்டிக் கொலை

Rowdy dies after attack in GRH

Rowdy dies after attack in GRH
Rowdy dies after attack in GRH

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரௌடி பொக்கை ரவி திங்கள்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவி என்ற பொக்கை ரவி (35). இவர் மீது கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவி, அண்மையில்தான் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்நிலையில், நரம்பு தளர்ச்சி பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த ரவி, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மூட நீக்கியல் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரவி திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் பாரிமுனை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சாந்தகுமார், தமிழச்செல்வன் ஆகியோருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல், திடீரென பொக்கை ரவியை அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க முயன்ற சாந்தகுமாருக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

பின்னர் அந்த கும்பல், அங்கிருந்து ஆட்டோவில் தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த ரவி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாந்தகுமார், தமிழ்ச்செல்வன் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Rowdy dies after attack in GRH

Rowdy dies after attack in GRH
Rowdy dies after attack in GRH

A notorious history-sheeter was hacked to death on Monday by a gang at Government Royapettah Hospital (GRH), where he was undergoing treatment. Two others present with him were also attacked. After his recent release from detention under Goondas Act, Ravikumar, (35), was admitted to the neurosurgery ward of the hospital on the third floor of the main building. Late on Monday evening, a gang of eight walked into the ward and grievously assaulted Ravi and two others, who were his attendants. Ravi suffered multiple injuries and was rushed to Rajiv Gandhi Government General Hospital, where he died around 10.50 pm. Police sources said Ravikumar alias ‘Bokkai’ Ravikumar was an accused in several criminal cases including murder. He also led a gang that had a running feud with another criminal gang. Officials added that his men had allegedly played a role in the murder of a rival gang member and they suspected that avenging that murder could have been the motive for the daring attack on Monday. This is the second such case in the recent past where a patient admitted to government hospital came under attack. In March last year, Suresh (41), who was admitted in Rajiv Gandhi Government General Hospital, was murdered inside the ward by a gang in the middle of the night.

 

Related posts