Two killed, one critically injured in fire accident near Sivakasi விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் இறந்தனர். சிவகாசி- திருவில்லிபுத்தூர் சாலையில் மல்லி அருகேயுள்ள வேண்டுராயபுரத்தில் சிவகாசியைச் சேர்ந்த வைரமுத்துக்குமார் என்பவருக்குச் சொந்தமான முன்னா என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. புதன்கிழமை மாலை இந்த பட்டாசு ஆலையில் ஏராளமானோர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு அறையில் ராக்கெட் வெடிகளுக்கு மருந்து நிரப்பும்போது உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதனால், அந்த அறையும் அடுத்தடுத்து உள்ள 8 அறைகளிலும் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் தீப்பற்றி 8 கட்டடங்களும் இடிந்து சேதமடைந்தன. விபத்து ஏற்பட்ட அறையில் பட்டாசுகளுக்கு வெடிமருந்து நிரப்பிக் கொண்டிருந்த திருத்தங்கல் பெரியார் நகரைச் சேர்ந்த அல்போன்ஸ் (55), முனியசாமி (35) ஆகிய இருவரும் தூக்கி…
Read More சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து இரண்டு தொழிலாளர்கள் உயிரிழப்புஉள்நாட்டு வானவியல் மந்திரி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு
Civil Aviation Minister meets Prime Minister Narendra Modi Civil Aviation Minister meets Prime Minister Narendra Modi கடந்த சனிகிழமை, 22 ஜூன், 2014, உள்நாட்டு வானவியல் மந்திரி அஷொக் கஜபதி ரஜு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வானவியல் பிரிவில் ஏற்படும் சிக்கல்களைப் பற்றி எடுத்துரைத்தார். அவற்றுல் நகரத்தின் வெளிபுறத்தில் கட்டவிருக்கும் விமான நிலையங்களும், தாரை எரிபொருள் விலை குறைப்பு மற்றும் நலிந்திருக்கும் ஆர் இந்தியா நிறுவனத்தை திருப்புதலும் அடங்கும். இந்திய பாதுகாப்பு இச்சிக்கல்களைப் பற்றி பெரும் விரிவாக்கவுறை நடந்ததுடன் அமெரிக்க மத்திய வானவியல் நிர்வாகம் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் பாதுகாப்பின் தகுதி குரைந்துள்ளதைப் பற்றியும் மற்றும் விமானம் வெளிநாட்டில் பரப்பதற்க்குள்ள விதிமுறைகளைப்பற்றியும் கலந்தாலோசித்தனர். முந்தைய அரசாங்கம் இந்த விதிமுறையைக் குறைப்பதற்க்கு மிகவும் ஆர்வம் காட்டியது. இவ்விதிமுறைகளால் ஆர் ஆசிய இந்தியா…
Read More உள்நாட்டு வானவியல் மந்திரி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுஇடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சால் பதற்றம் போலீஸ் குவிப்பு
Is Idinthakarai on the edge of lawlessness? திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் இரு தரப்பு மீனவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அப்போது 30-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒரு பெண் காயம் அடைந்தார். பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரையில் கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் அங்கிருந்து வெளியே வந்த பின்னரும் இடிந்தகரையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடரும் மோதல் அணு உலைக்கு ஆதரவாக ஸ்டாலின் என்பவர் தலைமையில் மற்றொரு தரப்பினர் செயல்பட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக அணுஉலை எதிர்ப்பு மற்றும் ஆதரவு தரப்பினர் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. மோதலின்போது, நாட்டு வெடிகுண்டுகள் வீசப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில்,…
Read More இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சால் பதற்றம் போலீஸ் குவிப்புமருத்துவமனையிலிருந்து குழந்தையை கடத்திசென்ற பெண்னை ஐந்து மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்
10-day-old baby goes missing in GRH, police trace it in five hours மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில், நேற்று காலை 9 மணிக்கு கடத்தப்பட்ட பெண் குழந்தையை, ஐந்து மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். திருடிய பெண்ணையும், கணவரையும் கைது செய்தனர். விருதுநகர் வத்திராயிருப்பைச் சேர்ந்த கருப்பசாமி மனைவி முத்துலட்சுமி,26. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் ஜூன் 10ல் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. வலிப்பு நோய் இருந்ததால் வார்டில் சிகிச்சையில் உள்ளார். ராஜபாளையம் சொக்கநாதபுதூரைச் சேர்ந்த விக்னேஷ் மனைவி முத்து, 28. இவருக்கு ஜூன் 10ல் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை நேற்று முன்தினம் இறந்தது. மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில், சிசு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. வார்டில்…
Read More மருத்துவமனையிலிருந்து குழந்தையை கடத்திசென்ற பெண்னை ஐந்து மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்மலேசியாவில் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜகாந்த்
மலேசியா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பிய ஒரு ரசிகரை பளார் என்று அறைந்த சம்பவம் தமிழர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்து வரும் படம் “சகாப்தம்”. இந்த படத்திற்கான படப்பிடிப்பிற்கு இடம் பார்ப்பதற்காக மலேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கோத்தகினபாலு என்ற பகுதிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார் விஜயகாந்த். அங்கு அமைந்துள்ள சுதேரா துறைமுக ரிசார்ட்டில் தங்கியிருந்த அவர்கள், அங்குள்ள கடைவீதியில் இருக்கும் தமிழ்மக்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பிரேமலாதா அவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினால் மறுநாள் வாருங்கள் என்று கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த 6 தமிழர்கள் மறுநாள் காலையில் ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது பிரேமலதா அங்கு இல்லை. விஜயகாந்த் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். புகைப்படம் எடுக்கச் சென்ற அவர்கள் விஷயத்தை கூறியதும்…
Read More மலேசியாவில் புகைப்படம் எடுக்க விரும்பிய ரசிகரின் கன்னத்தில் அறைந்தார் விஜகாந்த்உலக அகதிகளின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டியது ஐ.நா. தகவல்
World Refugee Day: More than 50 million people displaced உலகத்தின் எதாவது ஓர் இடத்தில ஒவ்வொரு நாளும் போர் நடந்துகொண்டே இருக்கிறது. போரின் கோரக் கரங்களிலிருந்து உயிர் பிழைக்க, குடும்பம் குடும்பமாக மக்கள் இடம்விட்டு இடம் செல்ல நேர்கிறது. ஒவ்வொரு நிமிடமும் எட்டுப் பேர் தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வேற்றிடம் தஞ்சம் புகுகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இத்தகைய அகதிகளின் நிலைபற்றிய ஒரு ஆய் வரங்கை ஐ.நா. 1951-ல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக 2000-ல் ஐ.நா. இயற்றிய ஒரு தீர்மானத்தில் 1951 கூட்டத்தின் 50-வது ஆண்டுவிழாவை ஒட்டி, ஜூன் 20-ம் தேதியை அகதிகளுக்கான ஒரு உலக நாளாக அறிவித்ததையொட்டி, 2001 முதல் அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 2011-ம் ஆண்டு வரை உலகத்தில் அகதிகளாக மாறும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள் சுமார் 4 கோடியே 33 லட்சம் பேர்…
Read More உலக அகதிகளின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டியது ஐ.நா. தகவல்மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?
Railway line between Avadi and Sriperumbudur – Will it get renewed in Modi’s Period? மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா? -என்று பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள் பொதுமக்கள், பயணிகள் மற்றும் தொழில்நிறுவணங்கள். ஸ்ரீபெரும்புத்தூர், சென்னையை ஒட்டியுள்ள பகுதியில் பல தொழிற்சாலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் அமைந்துள்ளன. தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சாலைகள் வயலாக மட்டுமே அனுப்ப படுகிறது. இப்பொருட்கள் ரயில்களில் அனுப்ப வேண்டும் என்றால் சாலை வழியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்வரை எடுத்துச்சென்று, பிறகு சரக்கு ரயில்களில் ஏற்ற வேண்டியுள்ளது. ஆகவே, அங்குள்ள தொழில் நிறுவனங்கள் இப்பொருட்களை ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்தே நேரடியாக எடுத்துச்செல்ல தனி ரயில் பாதை அமைத்து தருமாறு கோரிக்கையளித்தனர். ரூ. 600 கோடி செலவில் புதிய பாதை ரயில்வே நிர்வாகம்,…
Read More மோடி ஆட்சியில் ஆவடி ஸ்ரீபெரும்புத்தூர் இடையிலான ரயில் பாதை திட்டம் புத்துயிர் பெருமா?நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்
நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர் Hundreds of Congress Men Paid Homage to late Prime Minister Rajiv Gandhi மே 23, 2014 அன்று காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பலர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு நாளை ஒட்டி ஸ்ரீபெரும்புதூரிலுள்ள அவரது நினைவகத்தில் ஒன்று கூடி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு காங்கிரஸ் செயர்குழு தலைவர் திரு. B. S. ஞாணதெசிகன் மற்றும் அவரது தொண்டர்கள் ராஜீவ் காந்தி இறந்த இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மற்றும் திரு. B. S. ஞாணதெசிகன் அவர்கள் மறைந்த இராணுவ அதிகாரியின் மனைவி திருமதி. இந்து ரெபிகா வர்கீஸ்க்கு இழப்பீடாக ரூ. 1 லட்சம் வழங்கினார். திரு. B. S. ஞாணதெசிகனுடன் முன்னால் மத்திய அமைச்சர்கள் திரு. V.…
Read More நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ராஜீவ் காந்தி அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்மலேசிய அருகே வந்து கொண்டிருந்த இந்தோனேசியா அகதிகள் படகு கடலில் மூழ்கியது
66 missing after boat sinks off Malaysia இந்தோனேசியாவில் இருந்து அகதிகள் படகு ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதில் 97 பேர் பயணம் செய்தனர். மலாக்கா ஜலசந்தி அருகே பான்டிங் கடற்கரை நகரில் அருகே 3 கி.மீட்டர் தூரத்தில் வந்த போது அந்த படகு கடலில் மூழ்கியது. எனவே அதில் பயணம் செய்தவர்கள் கடலில் தத்தளித்தனர். அதை பார்த்த மலேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் ஒரு படகை அனுப்பினர். விரைந்து சென்ற அவர்கள் 31 பேரை மட்டுமே மீட்டனர். மேலும் 66 பேரை மீட்க முடியவில்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அவர்களின் கதி என்ன என்று தெரிய வில்லை. அவர்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருந்தாலும் 2 படகுகளை அனுப்பி அவர்களை தேடும் பணி நடக்கிறது. மரத்தினால் ஆன…
Read More மலேசிய அருகே வந்து கொண்டிருந்த இந்தோனேசியா அகதிகள் படகு கடலில் மூழ்கியதுஜூன் 19ஆம் தேதி சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
Auto drivers to go on strike on Thursday பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (ஜூன் 19) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென ஆட்டோ ஓட்டநர் தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு), ஏஐடியுசி, விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள், குட்வில் உள்ளிட்ட அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாவட்ட செயலர் பாலு கூறியது: எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை மாற்றியமைக்க முத்தரப்பு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். போலீஸôர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் வாகனங்கள் விடுக்கப்பட வேண்டும் என்பதோடு, மொத்தம் 3,400 ஆட்டோ ஓட்டுநர்களிடம் கூடுதல் கட்டண புகாரின் பேரில் வசூலிக்கப்பட்ட…
Read More ஜூன் 19ஆம் தேதி சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

