பிரான்ஸ் நாட்டு வாலிபர் இந்திய புதையலை கண்டுபிடித்துள்ளார்

Climber finds treasure from Indian air crash on Mont Blanc   இந்திய நபருக்கு சொந்தமான புதையலை ஆல்ப்ஸ் மலையில் பிரான்ஸ் நாட்டு வாலிபர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரான்ஸ்–இத்தாலி நாட்டு எல்லையில் அமைந்துள்ள சிகரத்தில் ஏறிய பிரான்சு நாட்டு வாலிபர் ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்தது. பனிக்கட்டியால் ஆன அந்த சிகரத்தில் சிரமத்துடன் ஏறிய அவருக்கு பழங்கால பெட்டியில் விலை உயர்ந்த ஆபரண கற்கள் அடங்கிய புதையில் கிடைத்தது. அந்த பெட்டியில் இருந்த மரகதம், மாணிக்கம் மற்றும் நீல நிற கற்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புதையலை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அந்த வாலிபர் ஒப்படைத்துள்ளார். அந்த கற்களில் அவை இந்தியாவில் செய்யப்பட்டவை என்று பொறிக்கப்பட்டு இருந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 1950…

Read More பிரான்ஸ் நாட்டு வாலிபர் இந்திய புதையலை கண்டுபிடித்துள்ளார்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது

no fuel for traffic violators. No helmet no petrol new rule in Gujarat அகமதாபாத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை ஒழுங்குபடுத்த புதிய திட்டம் ஒன்றை கையாள போக்குவரத்து காவல்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தின் படி போக்குவரத்து காவல்துறையும், பெட்ரோல் பங்க் நிறுவனமும், இணைந்து போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுனர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என முடிவெடுத்து உள்ளார்கள். வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறை படுத்தபடவிருக்கும் இந்த விதிமுறைபடி, உரிமம் இல்லாத ஓட்டுனர்கள், இருக்கை பெல்ட்களோ, ஹெல்மெட்டோ அணியாதவர்கள் ஓட்டிவரும் வாகனங்கள், ஹெல்ப்லைன் எண்கள் எழுதப்படாத ஆட்டோக்கள், ஆடம்பரமான எண் பலகைகள் கொண்ட இரு சக்கர வாகனங்கள், கண்ணாடிகளில் அடர்த்தியான பிலிம் பேப்பர் ஒட்டப்பட்ட கார்கள் போன்றவற்றிற்கு எரிபொருள் அளிக்க வேண்டாமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்…

Read More போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பெட்ரோல் கிடையாது

ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் சாவு

20 killed in bus accident in Sirmaur in Himachal pradesh ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று (27 செப்டம்பர் 2013) காலை தனியார் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் சிர்மோர் மாவட்டம் ரேனுகாஜில் புறப்பட்டு  உசாதிகார் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது.  தடாப்ரோக் எனும் பகுதியினில் சென்று கொண்டிருந்த போது சுமார் 550 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் 20 பயணிகள் பலியாகினர் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். 15 பயணிகள் விபத்து நடந்த இடத்திலும், 5 பேர் படுகாயமுற்று  மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதும் பலியாகினர் என காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலியான பயணிகள் எல்லோரும் உசாதிகார், அந்தாரி, மற்றும் ஹரிபூர் தார் பகுதிகளை சார்தவர்கள் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் அங்கு…

Read More ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 20 பேர் சாவு

திருச்சி மாநாட்டில் மத்திய அரசை சரமாரியாக தாக்கி மோடி உரை

Narendra modi speech in trichy திருச்சி: மத்தியில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு தொடர்ந்தால், நம் இளைஞர்கள் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படும் என திருச்சியில் 26.9.2013 வியாழன் நடந்த பா.ஜ.க. இளந்தாமரை மாநாட்டில் நரேந்திர மோடி பேசினார். திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பா.ஜ.க.வின் இளந்தாமரை மாநாடு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த மாநாடு காரணமாக திருச்சி நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. மாநாடு மேடை டெல்லி செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேளராவில் இருந்து தனி விமானம் மூலம் பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி திருச்சி வந்தனர். அவர்களை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்றனர். இந்த…

Read More திருச்சி மாநாட்டில் மத்திய அரசை சரமாரியாக தாக்கி மோடி உரை

கடலூரில் மணமுடிக்க மறுத்த மாணவி கல்லூரி வாசலில் கொலை

கடலூரில் மணமுடிக்க மறுத்த கல்லூரி மாணவியை அவரது தாய்மாமன்  குத்திக் கொலை செய்தார். கழுத்தை அறுத்து கொலை செய்த பின், கத்தியுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை நடந்த இந்த கொலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள, காடாம்புலியூர் அருகே இருக்கும் காட்டாண்டி குப்பம் என்ற ஊரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். தர்மலிங்கத்தின் மகள் மகாலெட்சுமி (21). கடலூரில் உள்ள மஞ்சக்குப்பத்தில் கல்லூரி ஒன்றில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகாலட்சுமியினுடைய முறைமாமன் தமிழ்ச்செல்வன் (32). இவர் கடலூரில் உள்ள பச்சையாங்குப்பம் என்ற பகுதியை சேர்ந்தவர். சிறு வயதில் முதல் இவ்இருவரும் நெருக்கமாக பழகி வந்திருகின்றனர். அப்பழக்கத்தில் தம்மை மணம் முடித்து கொள்ளுமாறு தமிழ்ச்செல்வன் வற்புறுத்தி வந்திருக்கிறார். இதை மகாலட்சுமி கண்டும்காணாமல் இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், நேற்று கல்லூரியில் நடந்த ஒரு…

Read More கடலூரில் மணமுடிக்க மறுத்த மாணவி கல்லூரி வாசலில் கொலை

சீன நபருக்கு நெற்றியில் வளர்ந்த மூக்கு

nose in forehead for a Chinese man சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்ற நபருக்கு நெற்றியினில் மூக்கு வளர்ந்துள்ளது. சீனா நாட்டை சேர்ந்த ஜியோலியன் (வயது 22) என்ற வாலிபருக்கு கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்து ஒன்றில் மூக்கில் பலத்த காயம் உண்டானது. இந்த காயத்திற்கு அவர் முறையான சிகிச்சை ஏதும் எடுத்துக் கொள்ளாமல் இருந்ததால், முற்றிலும் குருத்தெலும்பு சேதம் அடைந்து  மூக்கு சிதைந்தது. இந்த சிதைந்த மூக்கை மருத்துவர்களால் சரிசெய்ய இயலாத காரணத்தால், ஒரு புதிய மூக்கை அவரது முகத்தில் உருவாக்க தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையை கையாள முடிவு செய்தனர். இந்த மருத்துவ முறைக்காக இடுப்பு எலும்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்சமயம் முழுமையான  வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், கூடிய  விரைவில் அது அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு மூக்கு பகுதியில்…

Read More சீன நபருக்கு நெற்றியில் வளர்ந்த மூக்கு

இந்திய மூத்த தலைவர் மக்கள் முன் தொகுப்பாளினியுடன் குத்தாட்டம்

Senior Congress N D Tiwaris sexy dance with lady உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர் அமைதியாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் லக்னோவில் தியாகிகளின் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் திவாரி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் நடந்த கலை விழாவின்போது மேடையேறிய திவாரி கதம் கதம் பாத்யா ஜா என்ற பாடலைப் பாடினார். பின்னர் நடனமும் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்ணுடன் சேர்ந்து அவர் ஆடியதால் அங்கு கலகலப்பு கூடியது. அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் திவாரி. இருப்பினும் விழா…

Read More இந்திய மூத்த தலைவர் மக்கள் முன் தொகுப்பாளினியுடன் குத்தாட்டம்

ராஜஸ்தானில் குடிகாரர்கள் சம்பளம் மனைவியிடம் கொடுக்கப்படும்

alcoholic Government staff salary will be given to spouse in rajasthan குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களும் மதுவுக்கு அதிகளவில் அடிமையாகி கிடக்கின்றனர். வாங்கும் சம்பளம் முழுவதையும் இதற்கே செலவழித்து விட்டு, குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற அவலத்தை தடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிரடி சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். அதன்படி குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியரின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் 1971ல் சமீபத்தில் திருத்தம் செய்துள்ளார். ஒரு ஊழியர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருடைய சம்பளத்தில் பாதி மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இருப்பினும்…

Read More ராஜஸ்தானில் குடிகாரர்கள் சம்பளம் மனைவியிடம் கொடுக்கப்படும்

கோவை பா.ஜ.க நிர்வாகியின் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Coimbatore Petrol bomb attack  at BJP Functionary residence கோவை: போலீஸ் பாதுகாப்பில் உள்ள கோவையின் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின்னுடைய இல்லத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் குண்டு எறியப்பட்ட இல்லத்தின் உரிமையாளர் திரு.ராமநாதன். இவர் வடவள்ளி பகுதியின் தாயுமானவர் வீதியில் வாழ்ந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, கோவை பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதாக எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்துள்ளது. அதில் திரு.ராமநாதனுடைய பெயரும் இருந்திருந்ததால், அவரது இல்லத்திற்கும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்பு கொடுக்கபட்டிருந்தது. திரு.ராமநாதனை இல்லத்தின் உள்ளே பாதுகாப்பாக இருக்கச் அறிவுறியத்தியதால் சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. நள்ளிரவு சுமார் 12:20 மணியளவில் நிகழ்த்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல்…

Read More கோவை பா.ஜ.க நிர்வாகியின் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற 2000 ஆசிரியர்கள் கைது

Government elementary school teachers arrested when they tried to have a procession towards secretariat ( Fort St. George) சென்னை: கோட்டையை நோக்கி பேரணியாக போக முயன்ற சுமார் 2000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போலிசாரால் கைது செய்ய பட்டனர். பேரணி செல்ல முயன்ற ஆசிரியர்களை போலீசார் விருந்தினர் மாளிகை அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், மத்தியஅரசின்  இடை நிலை ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என கோரியும் பேரணி சென்றனர். Government elementary school teachers arrested when they tried to have a procession towards secretariat ( Fort St. George)

Read More கோட்டையை நோக்கி பேரணியாக சென்ற 2000 ஆசிரியர்கள் கைது