Senior Congress N D Tiwaris sexy dance with lady
உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் என்.டி. திவாரி அவர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர் அமைதியாக ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் லக்னோவில் தியாகிகளின் நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் திவாரி அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் நடந்த கலை விழாவின்போது மேடையேறிய திவாரி கதம் கதம் பாத்யா ஜா என்ற பாடலைப் பாடினார். பின்னர் நடனமும் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்ணுடன் சேர்ந்து அவர் ஆடியதால் அங்கு கலகலப்பு கூடியது. அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் திவாரி. இருப்பினும் விழா ஏற்பாட்டாளர்கள் மிகுந்த சிரமப்பட்டு திவாரியை மெதுவாக மேடையை விட்டு இறக்கிச் சென்றனர். ஆந்திரா மாநில ஆளுநராக இருந்த போது 86 வயதிலும் செக்ஸ் சர்ச்சையில் சிக்கி பதவி விலகினார் என்.டி திவாரி. திவாரிக்கு தினமும், மூன்று பெண்கள் வேண்டும். காலையில் ஒரு பெண்ணிடம் மசாஜ் செய்து கொள்வார். இப்படி தினமும் அவரது பாலியல் ஆசைக்கு, பல பெண்களை அனுப்பி வைத்துள்ளேன் என்று ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்த ராதிகா பரபரப்பு தகவல்களை அளித்துள்ளார். இதனால் பதவியிழந்தவர் என்.டி.திவாரி என்பது நினைவிருக்கலாம். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பொது இடங்களில் நடனமாடிவருகிறார் என்.டி. திவாரி.
Senior Congress N D Tiwaris sexy dance with lady
He’s almost 90 years old, but that doesn’t stop him for shaking a leg. Former Uttar Pradesh and Uttarakhand chief minister Narayan Dutt Tiwari displayed his dancing prowess on Sunday in Lucknow at a function organised in memory of martyrs. Tiwari was the chief guest at the function. The programme was a cultural event where martyrs were remembered and their sacrifices honoured with patriotic songs and dances. During the performance, Tiwari took the stage and began singing the song “Kadam Kadam badhaye ja”. The octogenarian’s performance was much appreciated by the audience. The audience’s appreciation of his singing prowess seemed to goad Tiwari on and he forcibly began dancing with the show’s host. He caught hold of her and forced her to dance with him. While Tiwari was making a spectacle of himself, the crowd was catcalling and clapping away to glory. With great difficulty the organisers managed to bring Tiwari off the stage. Soon after that, most of the crowd left the venue.