alcoholic Government staff salary will be given to spouse in rajasthan
குடித்து விட்டு கும்மாளம் அடிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மனைவியிடம் கொடுக்கும் அதிரடி சட்டத்தை ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது. ராஜஸ்தான் அரசில் பணியாற்றும் ஊழியர்களும் மதுவுக்கு அதிகளவில் அடிமையாகி கிடக்கின்றனர். வாங்கும் சம்பளம் முழுவதையும் இதற்கே செலவழித்து விட்டு, குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். இதுபோன்ற அவலத்தை தடுக்கும் வகையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிரடி சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். அதன்படி குடிக்கு அடிமையாகி விட்ட அரசு ஊழியரின் சம்பளத்தில் பாதி மனைவியிடம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகள் 1971ல் சமீபத்தில் திருத்தம் செய்துள்ளார். ஒரு ஊழியர் மது பழக்கத்துக்கு அடிமையாகி விட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அவருடைய சம்பளத்தில் பாதி மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இருப்பினும் இதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. முதலில் போதைக்கு அடிமையாகி விட்டதால் குடும்பத்தை தனது கணவர் கவனிப்பது இல்லை என்று மனைவி புகார் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், கணவனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். பின்பு அரசு ஊழியர் போதைக்கு அடிமையாகி கிடப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இவ்வளவு சம்பிரதாயங்களும் முடிந்தால்தான், மனைவியிடம் பாதி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது நடைமுறையில் சாத்தியப்படாது என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
alcoholic Government staff salary will be given to spouse in rajasthan
இதையும் படியுங்கள்
- இந்திய மூத்த தலைவர் மக்கள் முன் தொகுப்பாளினியுடன் குத்தாட்டம்
- சீன நபருக்கு நெற்றியில் வளர்ந்த மூக்கு
- கடலூரில் மணமுடிக்க மறுத்த மாணவி கல்லூரி வாசலில் கொலை
- குட்கா, புகையிலை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ராஜஸ்தானில் அரசு வேலையில் சேர தடை
- லஞ்சம் கேட்பது அரசுப் பணியின் ஒரு பகுதியா? ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17A பாதுகாப்பு கிடையாது என உச்ச நீதிமன்றம் விளக்கம்
- குழந்தைகளுக்கும் இணையப் பயன்பாடு அடிப்படை உரிமை: உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? வயது அடிப்படையிலான முழுத் தடை ஏன் ஏற்கப்படவில்லை?
- செயல்படாத பொறியியல் கல்லூரிகள்: அடையாளம் காண அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர்கல்வித் துறை உத்தரவு; 24 கல்லூரிகளில் நான்கு ஆண்டுகளில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை
← முந்தைய செய்தி: கோவை பா.ஜ.க நிர்வாகியின் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
அடுத்த செய்தி →: இந்திய மூத்த தலைவர் மக்கள் முன் தொகுப்பாளினியுடன் குத்தாட்டம்

