கோவை பா.ஜ.க நிர்வாகியின் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Coimbatore Petrol bomb attack  at BJP Functionary residence

Coimbatore Petrol bomb attack  at BJP Functionary residence

கோவை: போலீஸ் பாதுகாப்பில் உள்ள கோவையின் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியின்னுடைய இல்லத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்ற சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் குண்டு எறியப்பட்ட இல்லத்தின் உரிமையாளர் திரு.ராமநாதன். இவர் வடவள்ளி பகுதியின் தாயுமானவர் வீதியில் வாழ்ந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, கோவை பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடக்க இருப்பதாக எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்துள்ளது. அதில் திரு.ராமநாதனுடைய பெயரும் இருந்திருந்ததால், அவரது இல்லத்திற்கும் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்பு கொடுக்கபட்டிருந்தது. திரு.ராமநாதனை இல்லத்தின் உள்ளே பாதுகாப்பாக இருக்கச் அறிவுறியத்தியதால் சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. நள்ளிரவு சுமார் 12:20 மணியளவில் நிகழ்த்தப்பட்ட இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவை வடவள்ளி காவல்துறையினர் சம்பவ நடந்த  இடத்தில் தடயங்கள் பலவற்றை சேகரித்து விசாரணை செய்து வருகிறார்கள். திருச்சி பாரதீய ஜனதா கட்சியினுடைய இளந்தாமரை மாநாடு நடந்து வரும் நிலையில் கோவை பா.ஜ.க நிர்வாகியின் இல்லத்தில் குண்டு எறியப்பட்ட சம்பவம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Coimbatore Petrol bomb attack  at BJP Functionary residence

English Summary: Unidentified guys throwed petrol bombs at the residence of a B.J.P party functionary, Mr.Ramanathan on Wednesday night. However, no one was injured in the Petrol bomb attack, Coimbatore police officials said.

Coimbatore Petrol bomb attack

Advertisement:

Visit http://www.bestsquarefeet.com/ for Excellent and genuine Real estate deal in Chennai

Related posts